கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!
கையில் இருக்கும் கொழுப்பினால், தசைகள் அதிகமாக காணப்படும். இதனால், உடலும் பெரிதாக தெரியும். இதை குறைக்க, ஆரோக்கியமான டயட் இருப்பதும் சரியாக உடற்பயிற்சி செய்வதும் அவசியமாகும். இதனுடன் சேர்த்து சில யோகாசனங்களையும் செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?
Adho Mukha Svanasana :
இந்த ஆசனம், கணுக்கால் மட்டும் கையை வைத்து செய்ய வேண்டியது. தலைவலியை போக்க, முதுகு வலியை போக்க, முட்டி வலியை போக்க என அனைத்திற்கும் இந்த ஆசனம் உதவும். இதைஇ, 30 வினாடிகள் வரை செய்யலாம்.
Dandayamana Bharmanasana:
உடலை பாலன்ஸ் செய்து செய்ய வேண்டிய ஆசனங்களுள் இதுவும் ஒன்றாகும். மனச்சோர்வை நீக்க, நினைவாற்றலை அதிகரிக்க என அனைத்திற்கும் இந்த ஆசனம் உதவும்.
Utthita Ardha Dhanurasana:
இந்த ஆசனத்தை நின்று கொண்டும் செய்யலாம், படுத்துகொண்டும் செய்யலாம். தொடைதசை, கை தசை ஆகியவற்றை குறைக்க உதவும்.
Vajrasana:
இந்த ஆசனம் செய்தால், சாதாரணமாகவே உங்கள் உடல் ரிலாக்ஸ் ஆகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பின்பகுதி, தொடை, கை தசைஆகியவற்றை குறைக்க இந்த ஆசனத்தை காலையில் செய்யலாம்.
Prasarita Padottanasana:
கை, கால், தொடை தசைகளை வலுவாக்கவும் குறைக்கவும் இந்த ஆசனத்தை செய்யலாம். இதனால் வயிற்றில் இருக்கும் தசையும் குறையுமாம். 30 வினாடிகள் வரை இந்த ஆசனத்தை செய்யலாம்.
Garudasana :
இதனை கழுபு போஸ் என்றும் கூறுவர். கைகளை ஒல்லியாக்க கால் தசைகளை வலுவாக்க இந்த ஆசனத்தை செய்யலாம். இதை செய்கையில், உடல் சமநிலையில் இருப்பது அவசியமாகும்.
Bakasana:
இந்த ஆசனத்தை 4 முறை வரை செய்யலாம். இது கையை வைத்து செய்யக்கூடிய ஆசனமாகும். தோள்பட்டை, மணிக்கட்டு, இடுப்பு, கைகள் ஆகியவறை வலுவாக்க இந்த ஆசனத்தை செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)