EPFO Withdrawal Rules: குழந்தைகளின் படிப்பிற்கு கை கொடுக்கும் PF பணம்... விண்ணப்பிக்கும் முறை
EFPO: சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான கட்டாய சேமிப்புத் திட்டமான இதனை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நிர்வகித்து வருகிறது. இதில் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் தொழிலாளர்களுக்கான காப்பீடு ஆகியவை அடங்கும்.
பிஎஃப் கணக்கு: சம்பளத்திலிருந்து இருந்து, பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் முதலீடு செய்யும் பணத்தை, ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக, குறிப்பிட்ட அளவு தொகையை ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
PF கணக்குகளை வைத்திருக்கும் நபர்கள், குழந்தைகளின் படிப்பு செலவிற்காக மொத்த ஊழியர் பங்களிப்பில் 50% என்ற அளவில் திரும்பப் பெறலாம். 10ஆம் வகுப்பை முடித்த பிறகு குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளை ஈடுகட்டப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
விதி 68K: திருமணம் அல்லது உயர்கல்வி நோக்கங்களுக்காக PF நிதியை திரும்பப் பெற, EPF உறுப்பினராக 7 வருடங்களை நிறைவு செய்ய வேண்டும். EPF உறுப்பினர்கள் பணத்தை திரும்ப பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தனது பங்கில் அதிகபட்சமாக 50% திரும்பப் பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை: PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்க ஆன்லைனில் EFPO அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது UMANG செயலின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு முதலில் உங்கள் UAN எண்ணுடன் உங்கள் கணக்கில் லாகின் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: 'online services' என்பதற்குச் சென்று, 'claim' பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் வங்கிக் கணக்கு எண்ணைச் சரிபார்க்கவும். பின்னர் காசோலை அல்லது பாஸ்புக்கின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றவும்.
பிஎஃப் கிளைம் செய்வதற்கான சமர்ப்பிப்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஆதார் அடிப்படையிலான OTP உள்ளிட்ட பின், கிளைம் செயலாக்கப்பட்டதும், அது ஒப்புதலுக்காக முதலாளிக்கு அனுப்பப்படும்.
பிஎப் கணக்கு இருப்பை அறிய: உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை, உங்கள் செல்போனிலிருந்து 01122901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் அறியலாம். உமங் (UMANG) என்ற செயலி மூலமும் உங்களது பிஎப் கணக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.