இந்த மாதத்துடன் முடிவடையும் கீழடி 8ம் கட்ட அகழ்வாய்வின் அபூர்வ கண்டுபிடிப்புகள்
தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்து வரும் 8ம் கட்ட அகழாய்வு பணிகளில் கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழியினுள் முதல் முறையாக நெல் மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட தளங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13 முதல் மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
கொந்தகை தளம் பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருக்க கூடும் என கருதப்பட்டு அங்கு நடந்த அகழாய்வில் இதுவரை மொத்தம் 142 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
8ம் கட்ட அகழாய்வில் 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.
முழுமையாக சேதமடையாமல் ஒரு சில தாழிகள் மட்டுமே உள்ளன
அவற்றில் உள்ள பொருட்களை மட்டும் மரபணு சோதனை செய்ய தமிழக தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம் முழுமையான தாழி திறக்கப்பட்டு அதில் உள்ள எலும்புகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டன