புடவை கட்டி விதவிதமாக போஸ் கொடுப்பது எப்படி? நயன்தாரா கொடுக்கும் ஐடியா..
முகத்தை காட்டாமல், இது போன்ற கேண்டிட் புகைப்பட போஸ்களை கொடுக்கலாம்.
ஹேர்ஸ்டைலை கவர் செய்யும் வகையிலும், உங்கள் முழு உருவத்தையும் காட்டும் வகையிலும் இது போன்ற போஸ்களை ட்ரை பண்ணலாம்.
கையில் ஒரு தமிழ் புத்தகம் வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கலாம். கைகளில் மருதாணி வைத்து சிவந்திருந்தால் இன்னும் சிறப்பு.
உங்களது முடி, அலங்காரம் செய்வது, மை இடுவது போன்ற போஸ்களை வைத்து போட்டோ எடுக்கலாம்.
தலையில் பூச்சூடுவது போல, ஏதாவது யோசித்துக்கொண்டிருப்பது போல புடவைக்கட்டி போஸ் கொடுக்கலாம்.
கால் கொலுசு, கை வளையல்களை மட்டும் காண்பித்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம்.
உங்களை சுற்றி கலாச்சார பொருட்கள் இருந்தால் அதன் மீது சாய்ந்தவாறு போட்டோ எடுக்கலாம். வீணை மீட்டுவது போல, ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாசிப்பது போல இருக்கும் போட்டோக்கள் தனித்துவமான அழகை பெற்றுக்கொடுக்கும்.