அவசரத் தேவைக்கு பணம் தேவையா? பர்சனல் லோன் தவிர வேற ஆப்ஷன்கள் இவை...

Thu, 04 Jul 2024-3:32 pm,

உங்களுக்கு அவசரத்திற்கு தேவைப்படும் பணத்தை உடனடியாகப் பெற கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அவசரகாலத்தில் உங்களுக்கு உதவக்கூடிய எளிய முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

சேமிப்பும் சில அவசரக் காலங்களில் கை கொடுக்காமல் போகலாம். அதேபோல, சில சமயங்களில் நமது பணத்தை எடுத்தால் நட்டம் ஏற்படும் என்ற சூழலிலும் சேமிப்பை எடுக்க முடியாத சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்

அவசரத் தேவைகளை பூர்த்தி செய்ய வாங்கும் பர்சனல் லோன்களுக்கான வட்டி மிகவும் அதிகம் என்பதால் அதை பலரும் விரும்புவதில்லை.

அவசரத் தேவைகள் என்பவை திட்டமிட்ட செலவுகளாக இல்லாமல், எதிர்பாராமல் திடீரென ஏற்படும் செலவுகள் ஆகும்

விபத்து, சுகாதார செலவு, திடீர் பயணம் என செலவுகளுக்காக அவசரமாய் பணம் தேவைப்படும் நிலை அடிக்கடியும் எழலாம். அவற்றை சமாளிப்பதில் தான் ஒருவரின் திறமை வெளிப்படுகிறது

இந்தியாவில் தங்க ஆபரணம் என்பது அனைவருக்கும் விருப்பமான நகை என்றாலும், அது அவசரத் தேவைகளுக்கு கை கொடுக்கும் மிகப் பெரிய முதலீடு ஆகும். நகை அடமானத்தில் கடன் வாங்குவது மிகவும் பாரம்பரியமான முறையாகும்

பிபிஎஃப்பில் இருக்கும் இருப்புத் தொகைக்கு எதிராக கடன் வாங்கலாம். ஆனால் இந்தக் கணக்குத் தொடங்கப்பட்ட ஒரு வருடத்திற்கு பிறகே கடன் வாங்கலாம். அதிகபட்ச கடன் தொகையானது பிபிஎஃப் நிலுவைத் தொகையில் 25% என்ற அளவில் இருக்கும்

முன்கூட்டிய சம்பளக் கடன் என்பது உடனடி பணத்தேவைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வேலை செய்பவர்களுக்கு முன்கூட்டியே சம்பளக் கடன்களை வழங்குகின்றன. இந்த கடன் ஒருவைன் சம்பளத்தில் மூன்று மடங்கு வரை இருக்கலாம் 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link