EPF Aadhaar Linking: நீட்டிக்கப்பட்டது காலக்கெடு, முழு விவரம் உள்ளே
EPFO-வில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. ஆதார் எண்ணை (Aadhaar Number) பிஎஃப் கணக்குகள் (PF Account) மற்றும் யுஏஎன் எண்ணுடன் (UAN Number) இணைப்பதற்கான கடைசி தேதியை 2021 செப்டம்பர் 1 வரை நீட்டித்துள்ளது (EPF-Aadhaar Linking Deadline Extended). இப்போது வரை இதன் கடைசி தேதி 2021 ஜூன் 1 ஆக இருந்தது. நீங்களும் உங்கள் ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குகள் மற்றும் யுஏஎன் கணக்குடன் இணைக்கவில்லை என்றால், விரைந்து அதை செய்து முடியுங்கள்.
நீங்கள் ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குகள் மற்றும் யுஏஎன் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால், உடனடியாக அதைச் செய்து விடுங்கள். இல்லையெனில் நீங்கள் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆதார் மற்றும் பான்-ஐ இணைப்பதற்கான கடைசி தேதியை அரசாங்கம் முன்பே நீட்டித்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
ஈபிஎஃப்ஒ வெளியிட்ட உத்தரவின்படி, ஆதார் சரிபார்க்கப்பட்ட யுஏஎன் உடன் பிஎஃப் வருமானத்தை சம்ர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 1, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மே 3 ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது, அதில் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆதார் எண் பயனாளிகளிடமிருந்து பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பிறகே EPFO காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
மார்ச் 31 அன்று, சிபிடிடி ஆதார் மற்றும் பான் இணைப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 30 வரை நீட்டித்தது. அறிக்கையின்படி, இணைக்கும் தேதி நீட்டிக்கப்படுவது இதுவே கடைசி முறையாகும். ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.