PF உறுப்பினர்களுக்கு சூப்பர் அப்டேட்: வருகிறது வட்டித்தொகை.... உங்கள் கணக்கில் எவ்வளவு வரும்?

Tue, 03 Sep 2024-11:35 am,

 தனியார் துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் (EPF) பணி ஓய்வுக்குப் பிறகான ஒரு முக்கிய நிதி பாதுகாப்பாக கருதப்படுகின்றது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) ஓய்வூதியத்திற்காக சேமிப்பதற்கான ஒரு உறுதியான வழியாக உள்ளது.

 

இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தங்கள் ஊதியத்தில் மாதா மாதம் 12% ஊதியத்தை இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு பகுதி இபிஎஃப் கணக்கிலும் ஒரு பகுதி ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் (EPS) செல்கிறது. 

அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் EPF -க்கான வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்கிறது. 2022-23 இல் இது 8.1% ஆக இருந்தது. 2023-2024 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.25% ஆக உள்ளது. இபிஎஃப் கணக்கு உங்கள் ஓய்வூதியத்திற்கான நல்ல கார்பஸை உருவாக்க உதவும். 

 

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். இபிஎஃப் சந்தாதாரரின் (EPF Subscriber) 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ரூ.6,000 டெபாசிட் செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்த நிலையில், 8.25 சதவீத வட்டி விகிதத்தில் (Interest Rate) முதிர்வு காலத்தில் ரூ.21,57,867.30 கிடைக்கும்.

இதேபோல், 15 ஆண்டுகள் தொடர்ந்து EPF கணக்கில் மாதம் ரூ.8,000 முதலீடு செய்தால், 8.25 சதவீத வட்டி விகிதத்தில் முதிர்வு காலத்தில் ரூ.28,77,156.4 கிடைக்கும்.  

இபிஎஃப் உறுப்பினர் 15 ஆண்டுகள் தொடர்ந்து EPF கணக்கில் இல் மாதம் ரூ.12,000 முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது 8.25 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.43,15,734.6 கிடைக்கும்.

இபிஎஃப் பங்களிப்புக்கான (EPF Contribution) சம்பள வரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற முன்மொழிவு ஏப்ரல் மாதம் அனுப்பப்பட்டது. EPFO மூலம் நிர்வகிக்கப்படும் EPS எனப்படும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (Employee Pension Scheme) ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான சம்பள வரம்பு செப்டம்பர் 1, 2014 முதல் ரூ.15,000 ஆக உள்ளது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள அதிகரிப்பு தனியார் துறை ஊழியர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணங்களையும் சிறந்த நன்மைகளையும் வழங்கக்கூடும். 

ஊதிய வரம்பை 15,000 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்தும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அது தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் EPF பங்களிப்புகளில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும்.

 

EPS Pension Formula: உறுப்பினரின் மாதாந்திர ஓய்வூதியம் = ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் X ஓய்வூதியம் பெறக்கூடிய சேவைகாலம் / 70  (Member’s monthly pension = Pensionable salary X Pensionable service / 70)

இதற்கிடையில்,  இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்த மற்றொரு செய்தியும் அவர்களுக்கு கிடைக்கவுள்ளது. இது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசாக இருக்கலாம். இன்னும் சில நாட்களில் இபிஎஃப் வட்டித் தொகையை (EPF Interest Amount) அகர்கள் தங்கள் கணக்கில் பெறக்கூடும். அரசாங்கம் வட்டித் தொகையை கூடிய விரைவில் பிஎஃப் உறுப்பினர்களின் கணக்கில் டெபாசிட் செய்யவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பொறுப்பு துறப்பு: இந்த கணக்கீடுகள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே அளிக்கப்படுள்ளன. உண்மையான கணக்கீடுகள் காலப்போக்கில் செய்யப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். சமீபத்திய மற்றும் துல்லியமான வட்டி விகிதம் மற்றும் பிற தகவல்களுக்கு அவ்வப்போது EPFO -இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்க பரிந்துரைக்கப்படுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link