EPFO 3.0 விதிகள்: 7 கோடி+ EPF உறுப்பினர்களுக்கு இனி பல வேலைகள் எளிதாகும்.. முழு விபரம் இதோ

Tue, 28 Jan 2025-9:32 am,
EPFO

EPFO 3.0 விதிகள்: EPFO என்னும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, இந்தியாவில் அரசு, பொது, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைக்த்து ஊழியர்களின் PF கணக்கு மற்றும் அது தொடர்பான விஷயங்களை நிர்வகிக்கிறது.

EPFO New Rules

EPFO விதிகளில் ஏற்பட உள்ள முக்கிய மாற்றங்கள்: ஊழியர்கள் நலன் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது EPFO மாற்றங்களை கொண்டு வரும். அந்த வகையில், 2025ம் ஆண்டில் EPFO விதிகளில் ஏற்பட உள்ள முக்கிய மாற்றங்களை அறிந்து கொள்ளலாம்.

 

PF withdrawal rules

ஏடிஎம்மில் இருந்து பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி: EPFO ஆனது 24 மணிநேரமும் 7 நாட்களும் (24/7 )பணத்தை எடுக்க ஊழியர்களுக்கு விருப்பத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்டதன் மூலம், கணக்கில் பணத்தை திரும்ப பெற விரும்பும் பிஎஃப் சந்தாதாரர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும். இதற்கு தற்போது 7 முதல் 10 நாட்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பணியாளர் பங்களிப்பு வரம்பில் மாற்றம்: இந்த ஆண்டு, நிறுவனம் ஊழியர்களின் நிதிக்கான பங்களிப்பு வரம்பை மாற்றலாம். EPFO புதிய விதிகளின் கீழ், தற்போது, தனது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீத நிதியை ஊழியர் கணக்கில் டெபாசிட் செய்கிறார். இதற்கு சமமான தொகையை தொகையை நிறுவனம் டெபாசிட் செய்கிறது. இந்த வரம்பை அரசாங்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்படுத்தப்பட் தகவல் தொழில்நுட்ப அமைப்பு: EPFO இந்த ஆண்டு அதன் IT அமைப்பை மேம்படுத்துகிறது, இது PF வைத்திருப்பவர்கள் நிதியை டெபாசிட் செய்வதை எளிதாக்குகிறது. இந்த அமைப்பு ஜூன் 2025 க்குள் தகவல் தொழில்நுட்ப மேம்படுத்தலை நிறைவு செய்யும் என்று கூறப்படுகிறது. இதனுடன், கணினி மேம்படுத்தல் காரணமாக, கோரிக்கைகளை எளிதாக தீர்க்க முடியும்.

பங்குகளில் முதலீடு செய்யும் விருப்பம்: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு PF வைத்திருப்பவருக்கு ஈக்விட்டியில் முதலீடு செய்வதற்கான விருப்பத்தை வழங்க முடியும். இதன் மூலம், பிஎஃப் வைத்திருப்பவர்கள் தங்கள் நிதியை தாங்களாகவே நிர்வகிக்க முடியும். மேலும் அதிலிருந்து அதிக வருமானத்தையும் பெற முடியும்.

ஓய்வூதிய நிதியை திரும்பப் பெறுவது எளிது: EPFO அமைப்பின் கீழ் உள்ள PF நிதி ஓய்வூதிய நிதி என அழைக்கப்படுகிறது, இதில் இருந்து PF வைத்திருப்பவர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெறுவார்கள். EPFO ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிதியை திரும்பப் பெறுவது எளிதாக இருக்க வேண்டும். இதற்காக முக்கிய மாற்றங்களை செய்து வருகிறது. இதன் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் கூடுதல் வங்கிச் சரிபார்ப்பு இல்லாமல் பணத்தை எடுக்க முடியும்.

 

மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறை (CPPS): சமீபத்தில் இந்தியா முழுவதும் உள்ள EPFO ​அமைப்பின் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறை (CPPS) முழுமையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்கள் நாட்டில் உள்ள எந்த கிளையிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத் தொகையை பெற முடியும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link