EPFO உறுப்பினர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: கணக்கில் கூடுதல் பணம் வரப்போகுது!!

Sun, 15 Oct 2023-12:17 pm,

ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். 

தற்போது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு ஜாக்பாட் செய்தி கிடைத்துள்ளது. பிஎஃப் ஊழியர்கள் விரைவில் வட்டித் தொகையைப் (PF Interest) பெற உள்ளனர். இது பண்டிகை காலத்தில் ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும். 

சில நாட்களுக்கு முன், பிஎஃப் ஊழியர்களுக்கு 8.15 சதவீத வட்டியை அரசு அறிவித்தது. அதன்பிறகு இந்த வட்டி பணம் எப்போது கணக்கில் வரவு வைக்கப்படும் என ஊழியர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். தற்போது தொழிலாளர்களின் காத்திருப்பும் முடிவுக்கு வர உள்ளது. 

இன்னும் சில நாட்களில் வட்டி பணம் சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். பிஎஃப் இருப்பை இந்த வழிகளில் செக் செய்யலாம். 

EPF கணக்கில் அரசாங்கம் எவ்வளவு தொகையை செபாசிட் செய்துள்ளது என்பதை அறிய நீங்கள் எங்கும் அலைய வேண்டியது இல்லை. பிஎஃப் சந்தாதாரர்கள் உமங் செயலியை விரைவில் பதிவிறக்கம் செய்து, வீட்டில் இருந்தபடியே தங்கள் கணக்கில் உள்ள தொகையை சரிபார்க்கலாம்.

EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் ( epfindia.gov.in) சென்றும் உங்கள் கணக்கில் உள்ள தொகையை பற்றி தெரிந்துகொள்ளலாம். 

மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண்ணை இபிஎஃப்ஓ -வில் பதிவு செய்ய வேண்டும். பிஎஃப் சந்தாதாரர் மிஸ்டு கால் மூலம் இருப்புத் தகவலைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் கணக்குத் தகவல் வரும்.

எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, இபிஎஃப்ஓ -இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இதற்கு, EPFO UAN LAN என்று டைப் செய்ய வேண்டும். இங்கு LAN என்றால் மொழி என்று பொருள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link