EPFO new rule : UAN இணைப்பதில் தாமதம் ஏற்படுவதை தடுக்க சில முக்கிய அம்சங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!
EPFO புதிய விதகளின் முடிவு ஆதார் பெற முடியாத ஊழியர்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது. இதுவரை பி. எஃப் உறுப்பினர்களுக்கு இடையூறாக இருந்த ஆதார் தொடர்பான சவால்களை எதிர்கொண்ட தொழிலாளர்களுக்கு இந்த மாற்றம் ப் எஃப் ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஆதார் இல்லாத ஊழியர்கள் இன்னும் ஈபிஎஃப்ஓவில் இணைக்கக் கூடுதல் கால அவகாசம் கொடுத்துள்ளது. பாஸ்போர்ட், குடியுரிமைச் சான்றிதழ் அல்லது பிற அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தைச் சரிபார்த்துச் சமர்ப்பிக்க வேண்டும்.
EPFO ஊழியர்கள் தங்களது பான் கார்டு, வங்கிக் கணக்குத் தகவல் மற்றும் கூடுதல் தேவையான சான்றிதழ்களைப் பயன்படுத்தி அடையாளச் சரிபார்ப்பு மேற்கொள்ள வேண்டும்.
EPFO விதிகளின்படி எந்தவொரு ஊழியரும் PF தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க விரும்பினால் நிச்சயம் ஊழியர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கூறலாம்.
பி. எஃப் ஊழியர்கள் உங்கள் பி. எஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவும் மற்றும் UANவில் ஆதார் எண் இணைக்கப்படவும் தேவையான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஈபிஎஃப்ஓ சில ஊழியர்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளித்துள்ளது. இந்தியாவில் பணிபுரிந்த பிறகு தங்கள் நாட்டிற்குத் திரும்பிய மற்றும் ஆதார் பெற முடியாத சர்வதேச ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டுக் குடியுரிமை கொண்ட இந்தியர்கள் ஆதார் பெற முடியாதவர்களாக இருப்பவர்களுக்கு இதில் விலக்கு அளித்துள்ளது. நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்களிடம் ஆதார் கட்டாயமாக இல்லாதவர்களுக்கு இதில் விலக்கு அளித்துள்ளது மற்றும் நிரந்தரமாக வெளிநாடுகளுக்குச் சென்ற முன்னாள் இந்தியக் குடிமக்களும் இந்த விலக்குக்குத் தகுதியுடையவர்கள்.
ஊழியர்களின் உரிமைகோரல் செயல்முறை விதிகள்: எந்தவொரு உரிமைகோரலையும் கவனமாக ஆராய வேண்டும் என்று ஈபிஎஃப்ஓ அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்பின் இ-அலுவலகம் மூலம் அதிகாரியிடம் ஒப்புதல் பொறுப்பான அனுமதி OIC) வழங்கப்படும்.
EPFO ஊழியர்கள் தங்கள் UAN எண்ணைப் பராமரிக்கவும் அல்லது முந்தைய சேவையின் பதிவுகளை அதே UAN-க்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த உரிமைகோரல் செயல்முறை EPFO ஊழியர்களுக்கு சிரமத்தைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்டது.