PF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: EPF கணக்கு விதிகளில் மாற்றம்

Thu, 08 Aug 2024-4:31 pm,

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நிர்வகிக்கப்படும் EPF -இல் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

 

செயலற்ற கணக்குகள் மீதான கட்டுப்பாட்டை அதிகரித்து மேம்படுத்த EPFO ​​புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மோசடிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பண பரிமாற்றத்தைத் தடுக்கும் நோக்கத்துடன் செயலற்ற கணக்குகள் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்த புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. 

 புதிய விதிகளின் கீழ், செயலற்ற கணக்குகளுக்கான நிலையான இயக்க நடைமுறை (SOP) புதுப்பிக்கப்பட்டது. இதில் கடுமையான சரிபார்ப்பு செயல்முறையும் உள்ளது. இந்த புதிய விதிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

புதிய விதிகளின் கீழ், குறைந்த பரிவர்த்தனைகளைக் கொண்ட கணக்குகள் மற்றும் செயலற்ற கணக்குகள் என கணக்குகள் 2 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் கிரெடிட் அல்லது டெபிட் (வட்டி தவிர) இல்லாத கணக்குகள் ‘பரிவர்த்தனைகள் இல்லாத கணக்குகள்’ என்ற பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. இவை குறைந்த பரிவர்த்தனைகளைக் கொண்ட கணக்குகள் பிரிவில் உள்ளன.

செயலற்ற கணக்குகள்: EPF திட்டத்தின் கீழ் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின் கீழ் வரும் கணக்குகள் 'செயலற்றவை' என்ற பிரிவில் சேர்க்கப்படும். பணத்தை எடுப்பதற்கு அல்லது பண பரிமாற்றம் செய்யும் முன், இரண்டு வகையான கணக்குகளிலும் இப்போது சரிபார்ப்பு செயல்முறை இருக்கும். 

புதிய விதிகளின் கீழ், அனைத்து செயலற்ற கணக்குகளுக்கும் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பரை (UAN) உருவாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. செயலற்ற கணக்குகள் UAN உடன் இணைக்கப்படாத உறுப்பினர்கள் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு EPFO ​​அலுவலகங்கள் அல்லது சிறப்பு முகாம்களுக்குச் செல்ல வேண்டும். க்ளெய்ம் செய்பவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதும், மோசடிகளை தடுப்பதும் இந்த செயல்முறையின் நோக்கமாகும்.

ஏற்கனவே UAN இணைக்கப்பட்ட கணக்குகள் இருந்து, ஆனால், சரியான KYC தகவல் இல்லாதவர்கள் KYC சீடிங் செயல்முறையை செய்ய வேண்டும். இதை இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தங்கள் நிறுவனங்கள் / முதலாளிகள் மூலமாகவோ அல்லது நேரடியாக EPFO ​​அலுவலகங்களிலோ செய்யலாம். UAN உருவாக்கம் மற்றும் KYC புதுப்பிப்பு செயல்முறை இப்போது கணக்கு இருப்பைப் பொறுத்தது. இதற்கு மூத்த அதிகாரிகளின் ஒப்புதல் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தப்பட்ட SOP இன் கீழ், செயலற்ற கணக்குகளை அன்பிளாக் செய்ய தீவிர சரிபார்ப்பு செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் மற்றும் ஃபிசிக்கல் பதிவுகளின் சரிபார்ப்பும் இதில் அடங்கும். இது தவிர, முதலாளி / நிறுவனத்தின் உறுதிப்படுத்தலும் இதில் தேவைப்படும். 

முன்பு செயல்படாத கணக்குகளாக இருந்த கணக்குகளிலிருந்து செய்யப்பட்ட க்ளெய்ம்களும் கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) கணக்குகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவற்றின் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. EPFO சந்தாதாரர்களுக்கு இந்த புதிய விதிகள் குறித்து புரிதலும் தெளிவும் இருப்பது நல்லது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link