எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான முட்டை பேராபத்து!

Mon, 09 Oct 2023-6:26 pm,

முட்டை ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இருந்தாலும், அளவிற்கு அதிகமாக  சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். எனவே அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் சில தீமைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஒரு முட்டையில் சுமார் 180 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு முட்டை அல்லது இரண்டு முட்டை சாப்பிடுவது நல்லது. ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளுக்கு மேல் உட்கொள்வதால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கலாம். 

முட்டைகளை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்தை மோசமாக பாதிக்கிறது. முட்டையில் புரதச்சத்து நிறைந்திருப்பதே இதற்குக் காரணம். உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால், நீங்கள் முட்டைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அளவிற்கு அதிக முட்டைகளை சாப்பிடுவது நமது செரிமான அமைப்பை நேரடியாக பாதிக்கிறது. இது மலச்சிக்கல் பிரச்சனைக்கு வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், வயிற்றில் எரிச்சல் மற்றும் வாயு பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் இருக்கலாம்.

நீங்கள் முட்டைகளை அதிகமாக சாப்பிட்டால், உங்கள் செரிமான ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். முட்டையை அளவோடு சாப்பிடுவது நல்லது. அதிக முட்டைகளை சாப்பிடுவது வயிற்றுப்போக்கு அபாயத்தை அதிகரிக்கிறது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், நம் உடல் பலவீனமடையத் தொடங்கும்.

முட்டையை சாப்பிடுவது புரதச்சத்து காரணமாக உடல் எடையை குறைக்க உதவும் என்று பலர் நம்புகிறார்கள். முட்டைகள் சில கிலோவைக் குறைக்க உதவுகின்றன என்றாலும், அவற்றை அதிகமாக உட்கொள்வது உங்கள் எடை இழப்புத் திட்டத்தைப் பாழாக்கிவிடும். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link