அழிந்துபோன சிறுத்தைகள் மீண்டும் இந்தியாவில் எப்படி வந்தன தெரியுமா?

Wed, 03 Mar 2021-10:51 pm,

ஆப்பிரிக்காவிற்கும் மத்திய ஈரானுக்கும் சொந்தமான பூனை இனத்தைச் சேர்ந்தது சிறுத்தை. இது நிலத்தில் மிக விரைவாக பாய்ந்து ஓடக்கூடிய பாலூட்டியாகும், சிறுத்தை ஒரு மணி நேரத்திற்கு 60 அல்லது 70 மைல் வேகத்தில் ஓடக்கூடியது. சிறுத்தையின் சிறந்த கண்பார்வை இரையை கண்டறிய உதவுகிறது. சிறுத்தைகளைப் மனிதர்கள் பார்ப்பது கடினம். ஏனென்றால் சமவெளிகளின் உயரமான, உலர்ந்த புற்களுடன் இணைந்து நிற்கும்போது, சிறுத்தையின் சருமத்தில் உள்ள புள்ளிகள் அதை வித்தியாசப்படுத்தி காட்டுவதில்லை.

சிறுத்தைகள் அவற்றின் அளவு, வலிமை மற்றும் தாக்கும் திறன் காரணமாக 'பெரிய பூனைகள்' என்று அழைக்கப்படுகின்றன. புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், இவை அனைத்துமே இந்த இனமே.

1952 ஆம் ஆண்டில் அழிந்துபோன சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதில் நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த பெரிய பூனை விரைவில் நிதர்சனமாக காணலாம்.  

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு நான்கு சாத்தியமான இடங்களைத் தேர்ந்தெடுத்தது அங்கு சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  முன்னதாக 2021 ஜனவரியில், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, இந்தியாவில் சிறுத்தை மீண்டும் அறிமுகப்படுத்த நான்கு சாத்தியமான தளங்களை தேர்ந்தெடுத்தது. அவை, மத்திய பிரதேசத்தில் மூன்று மற்றும் ராஜஸ்தானில் ஒரு இடம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  

2020 ஜனவரியில் உயர் நீதிமன்றம் ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியாவில் பொருத்தமான வாழ்விடங்களுக்கு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்தது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link