சனி பெயர்ச்சி 2025... பாடாய் படுத்தும் ஏழரை நாட்டு சனி... தப்பிக்க சில பரிகாரங்கள்

Sun, 29 Dec 2024-9:57 am,

சனி பெயர்ச்சி 2025: 2025 மார்ச் 29ம் தேதி நடக்கக்கூடிய சனி பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுபட்டு சந்தோஷமான வாழ்க்கையை தொடங்க உள்ள அதே நேரத்தில், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி கொஞ்சம் சிக்கல்களை ஏற்படுத்துவார். எனினும், சில எளிய பரிகாரங்கள் மூலம் பாதிப்புகளை குறைக்கலாம்.

ஏழரை நாட்டு சனி: மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்கும். அதாவது 5 ஆண்டுகளுக்கு இன்னும் ஏழரை சனி இருக்கும். கும்ப ராசியினருக்கு பாத சனி, அதாவது இன்னும் 2 1/2 ஆண்டு ஏழரை சனி இருக்கும். மேஷ ராசியினருக்கு விரய சனி அதாவது 7 1/2 ஆண்டு இன்னும் ஏழரை சனி இருக்கும். 2025 ஜூன் 29ல் சனிப் பெயர்ச்சியாகும் சனி பகவான் 2027ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார்.

மேஷம்: 2025 சனி பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்கும். ஏழரை சனியின் தொடக்கம் என்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. ஆனால், இதனால். உடல் ஆரோக்கியம் பாதிக்கும். மேலும், எதிர்காலத்தில் நிதி நிலையில் பாதிப்பு ஏற்படும். இதனால் வரும் பிரச்சனைகளை எளிதாக சமாளிக்க உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது.

கும்பம்: 2025 சனி பெயர்ச்சி காலம், கும்ப ராசிக்கு ஏழரை சனியின் கடைசி காலமான பாத சனியாக அமையும். இதனால், பணக் கஷ்டம், மனக் கஷ்டம் இரண்டும் உண்டாகும். கடின முயற்சிக்கேற்ற பலன்கள், அதற்கான உரிய அங்கிகாரம் கிடைப்பதில் தாமதம் இருக்கும். பணியிடத்தில் பிரச்சனைகள், சிக்கலகள் இருக்கும். இதனால் மன உளைச்சல் ஏற்படும்.

 

மீனம்: விரய சனி காலத்தை அனுபவிக்கும் மீன ராசிகளுக்குகு 2028ம் வருடம் வரை ஏழரை சனி நீடிக்கும். தற்போது கும்பத்தில் சஞ்சரிக்கும் சனியால் ஏழரை சனி காலகட்டம் தொடங்கியுள்ள நிலையில், 2025ம் ஆண்டு மீனத்திற்கு வரும் போது, அதிக கஷ்டத்தை தரக்கூடிய ஜென்ம சனி தொடங்கும். இந்த காலத்தில் உடல் ஆரோக்கியம் பாதிக்கும் வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை பாதிக்கப்படும், பண நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள்: ஏழைகளுக்கு உதவி செய்தல், அன்னதானம் அளித்த ஆகியவை சனிபகவானின் மனதை குளிர்விக்கும். கடின உழைப்பாளிகளுக்கு சனி பகவானின் அருள் பரிபூரணமாக உண்டு. சனிக்கிழமையன்று ஹனுமனை வழிபடுவதன் மூலமும் ஏழரை சனியின் தாக்கங்களிலிருந்து நிவாரணம் பெறலாம். சனிபகவான் ஸ்தோத்திரத்தை சனிக்கிழமை 11 முறை பாராயணம் செய்தால் சனியின் பாதிப்பு நீங்கும்.

நீலமணி ரத்தினம்: வாழ்க்கையில் சந்தித்து வரும் துன்பங்கள் மறையவும், ஏழரை நாட்டு சனியின் பாதிப்பில் இருந்தும், சனி தோஷத்தில் இருந்தும் நிவாரணம் பெற ப்ளூ சஃபையர் என்னும் நீலமணி ரத்தினம் அல்லது நீலக்கல்லை அணிவது உதவும். சனி தேவரின் கோபப் பார்வை படிப்படியாக குறையத் தொடங்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

 

நீலக்கல்லை வெள்ளி அல்லது பிளாட்டினம் உலோகத்தில் பதித்து அணிவததால் மட்டுமே சாதகமான பலன்களை பெற முடியும் என்கின்றனர் நிபுணர்கள். தங்கத்தில் பதித்து அணிந்தால் பலன் இருக்காது. அதோடு, ஜோதிட நிபுணரின் ஆலோசனைப்படி சரியான நேரத்தில், சரியான முறைப்படி அணிய வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link