பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் டேட்டா திருடுகிறதா? அதிர்ச்சி தகவல்

Fri, 19 Jan 2024-2:27 pm,

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுகிறது. யூசர்களின் டேட்டாவை விளம்பர நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

 

டெக்சாஸ் பொது வழக்கறிஞர் கிரிஸ் ஹில் என்பவர் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் மெட்டா நிறுவனத்தின் மீது அவர் வைத்தார்

 

குறிப்பாக, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை டெக்சாஸின் தனியுரிமைச் சட்டங்களை மீறி டெக்சாஸ் குடிமக்களிடமிருந்து அதிக அளவு தனிப்பட்ட தரவைச் சேகரித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

 

இந்த வழக்கின் தீர்ப்பு இப்போது பேஸ்புக் நிறுவனத்துக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது. மார்க் ஜூக்கர்பெர்க் இப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

சர்ப்ஷார்க் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை தனியுரிமை-ஆக்கிரமிப்பு செயலிகள் என்று கூறுகிறது.

 

இந்த அறிக்கை, 100 பிரபலமான செயலிகளை ஆய்வு செய்து, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளின் தனியுரிமை கொள்கைகள் மீது குற்றம்சாட்டியுள்ளது. 

 

யூசர்களின் கட்டணத் தகவல், தேடுதல் வரலாறு மற்றும் சரியான இருப்பிடம் போன்ற 32 அளவுகோல்களின்படி செயலிகளை இந்த அறிக்கை வரிசைப்படுத்தியது.

 

இந்த அறிக்கையின்படி, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை ஆப்பிள் வரையறுத்துள்ள அனைத்து 32 தரவு புள்ளிகளையும் சேகரிக்கின்றன. மேலும், இந்த பயன்பாடுகள் 32 பயனர் தரவுப் புள்ளிகளில் பலவற்றை பயன்படுத்தியுள்ளன, இதில் பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகியவை கண்காணிக்கப்படுகின்றன.

 

இந்த அறிக்கை, மெட்டா மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்களின் தனியுரிமை நடைமுறைகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த நிறுவனங்கள் தங்கள் பயனர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க அதிகம் செய்ய வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link