அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பகத் பாசில்? ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகர் பகத் பாசிலுக்கு சமீக காலமாக தென்னிந்தியாவில் நிறைய ரசிகர் பட்டாளம் குவிந்துள்ளது. தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வருகிறார்.
தமிழில் வெளியான மாமன்னன், சமீபத்தில் வெளியான ஆவேசம், புஷ்பா போன்ற படங்களில் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்ற பகத் பாசிலை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார் பகத் பாசில்.
ஆரம்பத்தில் மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்த இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விக்ரம் படத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அடுத்ததாக ரஜினி - ஞானவேல் கூட்டணியில் உருவாகி வரும் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பகத் பாசில்.
சமீபத்தில் பகத் பாசில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அங்கு இருந்த மருத்துவரிடம் ADHD என்ற நோயை குணப்படுத்த முடியுமா என்று கேட்டார். அதற்கு மருத்துவரும் சிறுவயதிலேயே கண்டுபிடித்தால் சரி செய்யலாம் என்று கூறினார்.
உடனே பகத் 41 வயதில் கண்டுபித்தால் சரி செய்ய முடியுமா என்று கேட்டார். இதனால் பக்க பாசிலுக்கு ADHD எனப்படும் நரம்பு சம்பத்தப்பட்ட குறைபாடு உள்ளது என்று தெளிவாகிறது.