சுக்கிரன் பெயர்ச்சி: இந்த மாதம் முழுவதும் இந்த ராசிகளுக்கு பொற்காலம்... நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்
செல்வம், ஆடம்பரம், திருமண சுகம், பேச்சாற்றல் போன்றவற்றின் அதிபதியான சுக்கிரன் டிசம்பர் 2ஆம் தேதி மகர ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர் மீண்டும் இந்த மாதம் 28ஆம் தேதி கும்ப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் டிசம்பர் மாதம் முழுவதும் சில ராசிக்காரர்களுக்கு பல வாய்ப்புகளும், சுப நிகழ்ச்சிகளும் அமையும். வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
டிசம்பர் மாதத்தில் 2 முறை நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் டிசம்பர் மாதத்தில் இரண்டு முறை பெயர்ச்சி ஆவது சுப பலன்களை அளிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பல நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளையும் செய்து முடிக்கலாம். வேலை தேடிக்கொண்டு இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்: ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் பெயர்ச்சி இவர்களுக்கு பல வகையிலும் மேன்மையையும் மன மகிழ்ச்சியையும் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் மேம்படும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பிறக்கும். தந்தையின் ஆரோக்கியம் முன்னேற்றம் காணும். வாழ்க்கைத் துணையுடனான உறவு அன்பு நிறைந்ததாக இருக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மகிழ்ச்சியான பொழுதை அளிக்கும். மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் ஸ்திரத்தன்மை இருக்கும். பழைய வாடிக்கையாளர்களால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
துலாம்: துலாம் ராசிக்கு அதிபதியான சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஷக்ர ஸ்தானத்தில் தொடர்ந்து சஞ்சரிப்பார். சுக்கிர பெயர்ச்சியின் தாக்கத்தால் வீடு, மனை, வாகனம் வாங்கும் யோமம் உண்டாகும். தாயுடன் உறவு இனிமையாக இருக்கும். அரசு வேலை அல்லது வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். வேலை சுமை குறைவாக இருக்கும். அதனால் உங்கள் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம்: சுக்கிரன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுபமானதாக இருக்கும். இது எதிர்பாராத பண ஆதாயத்திற்கான நேரமாக இருக்கலாம். சில நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இனிதே நிறைவேறும். காதல் வாழ்க்கையில் புதிய உற்சாகம் உண்டாகும். திருமணத்திற்காக காத்திருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமானவர்களிடையே அன்பும், காதலும் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவுகள் வலுவடையும்.
மகரம்: சுக்கிரன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்சியை அதிகரிக்கும். கடந்த சில மாதங்களாக உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்கள் வேலையில் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் குறையும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். பங்குதாரரால் ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
கும்பம்: டிசம்பர் மாதத்தில் சுக்கிரன் கும்ப ராசிக்கு மாறி பின்னர் மகர ராசிக்கு மாறுகிறார். ஆகையால் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நிதி ஆதாயம் கிடைக்கும். மாதத் தொடக்கத்தில் சில சிரமங்களைச் சந்திக்க நேரிட்டாலும், பின்னர் உங்களின் வெற்றி வாய்ப்பும், வருமானமும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கமான சூழ்நிலை இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள், தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.