நீதிபதியாக தீர்ப்பு தந்தாலும், சனீஸ்வரருக்கு புடிச்ச ராசிகள் 3 மட்டுமே! உங்கள் ராசி எது?
சனீஸ்வரர் என்ற பெயரை கேட்டால் மனிதர்கள் மட்டுமா பயப்படுகிறார்கள்? உலகை ஆளும் பரமேஸ்வரனே பயந்து ஓடி, ஒழிந்து கொண்டார் என்ற கதையும் உண்டு. சனீஸ்வரன் நீதி தவறாதவர், பாரபட்சம் இன்றி நடக்கக் கூடியவர் என்பதற்காக சொல்லும் கதைகளை கேட்டிருக்கலாம்
சனியை போல் கெடுப்பவனும் இல்லை. சனியை போல் கொடுப்பவனும் இல்லை என்பார்கள். ஆனால், நவக்கிரக நாயகனான சனீஸ்வரருக்கு சில ராசிகள் பிடித்தமானவை என்று சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் என்ன தெரியுமா?
கும்பம்: சனிபகவானுக்கு மிகவும் பிடித்தமான ராசி கும்பம். ஏனென்றால், கும்ப ராசிக்காரர்கள் அதிக உழைப்பாளிகளாக இருப்பார்கள். கும்ப ராசி உள்ளவர்களின் உழைப்புக்கு சனீஸ்வரர் நல்ல பலன்களைக் கொடுப்பார்
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது. சனிபகவானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகளில் இந்த ராசியும் ஒன்று.
துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சிறப்பு அருள்பாலிக்கிறார். இந்த ராசிக்காரர்களிடம் சனி தேவன் எப்போதும் கருணையுடன் இருப்பார்
சனிபகவானின் அருள் பெற்றவர்களுக்கு சனியின் சதே சதி கூட பாதிப்பை ஏற்படுத்தாது. ஜனன ஜாதகத்தில் சனிபகவான் சுப ஸ்தானத்தில் அமைந்திருந்தால், அவர்களுக்கு வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் சனீஸ்வரர் அருள்வார்
பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை