சனி பகவானின் மனதிற்கு பிடித்த ராசிகள்... ஏழரை சனியிலும் கருணை காட்டுவார்..!

Sun, 24 Mar 2024-5:20 pm,

சனி பகவானின் அருள் இருந்தால் போதும், வாழ்க்கையில் எந்தவித பிரச்சனையும் இன்றி நிம்மதியாக இருக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும், வெற்றிகளை குவிக்கவும் சனீஸ்வரனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

நீதியின் கடவுள் என்று அழைக்கப்படும் சனிபகவான் தன் மனதிற்கு பிடித்த ராசிகளை, எழரை நாட்டு சனியில் கூட அவ்வளவாக துன்பத்தைக் கொடுக்க மாட்டார் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஏழரை நாட்டு சனி என்பது மிகவும் முக்கியமான கால கட்டமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். இந்த ராசிகள் மிகவும் நேர்மையானவர்களாகவும், மற்றவர்களின் கஷ்டத்தை நீக்கும் மனம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இதனால் சனிபகவான் இவர்களுக்கு எப்போதும் நற்பலன்களை அள்ளி வழங்குவார். தான தர்மங்களை அதிகம் செய்பவர்களை கண்டால் சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும் என்பதை இதற்கு காரணம்.

துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரனும் சனியும் நட்பு கிரகங்கள். இதனால் துலாம் ராசிக்காரர்கள் மீது சனி பகவானுக்கு எப்போதும் கருணை அதிகமாக இருக்கும். கடின உழைப்பில் நம்பிக்கை வைக்கும் இவர்களுக்கு, சனிபகவான் எப்போதும் கை கொடுப்பார். இவர்களின் சங்கடங்கள் அனைத்தும் எளிதாகத் தீர்ந்துவிடும்.

மகர ராசியினருக்கு அதிபதி சனி பகவான். இவர்கள் கடின உழைப்பாளிகள். எனவே சனி பகவானின் அருள் இவர்களுக்கு எப்போதுமே கிடைக்கும். மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் பொறுக்காத இவர்களின், வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்களை நொடியில் நீக்கி அருள் தருவார் சனிபகவான்.

 

கும்ப ராசியினருக்கு அதிபதி சனி பகவான். மிகவும் நேர்மையான மனப்பான்மை கொண்ட இவர்கள், பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பார்கள். இவர்களுக்கு ஏழரை நாட்டு சனி, சனி திசை, சனி பெயர்ச்சி ஆகியவை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாது. இவர்களுக்கு சனீஸ்வரனின் அருள் எப்போதும் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link