காதல் வலையில் சிக்கியவரா நீங்கள்? பிப்ரவரி மாதம் உங்க ராசிக்கு எப்படி இருக்கு?

Wed, 31 Jan 2024-4:02 pm,

பிப்ரவரி மாதத்தில், உங்கள் காதல் துணையுடம் மகிழ்ச்சியான பொழுதை செலவிடுவீர்கள். உங்கள் பிஸியான மற்றும் பிற வேலைகளின் பொறுப்பும் சில சிறிய சச்சரவுகளை ஏற்படுத்தும். இதற்கு மத்தியிலும் உங்கள் காதலருக்காக நேரம் ஒதுக்குவீர்கள். 

இப்போது ரிஷப ராசிக்காரர்களின் காதல் உறவுகள் அடுத்த நிலையை அடையும் நேரம். இந்த நேரத்தில் உங்கள் காதல் வாழ்க்கையில் தித்திக்கும் தருணங்களை எதிர்கொள்வீர்கள். குறிப்பாக ரிஷப ராசி பெண்களுக்கு இந்த மாதம் சிறப்பானது.

காதல் வலையில் சிக்கியுள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிக நேர்த்தியாக இருக்கும். முரண்பாடுகளை தள்ளி வைத்து ஒத்திசைந்து இருக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தி அவற்றையும் புறக்கணிக்காமல் இருந்தால், உங்கள் உறவு மோசமடையாமல் இருக்கும். 

உங்களுக்கும் உங்கள் காதல் துணைக்கும் கருத்து வேறுபாடு இருந்தால், அதைப் பற்றி விவாதித்து புதிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.மனக்கசப்பைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். 

உங்கள் காதல் துணையின் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். இந்த ஆண்டு காதலர் தினம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். 

இந்த மாதம் திருமணத்திற்கு குடும்பத்தாரிடம் ஒப்புதல் கிடைக்கலாம். இதனால் உங்கள் காதலருடனான உறவு இன்னும் பலம் பெறலாம். மற்றவர்களின் சச்சரவுகளைத் தீர்க்க முயற்சிக்கும்போது உங்கள் சொந்த உறவுகள் மோசமடைய விடாதீர்கள்.

துலாம் ராசிக்காரர்களுக்கு மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வாக்குவாதங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் அடிப்படை இயல்பை மனதில் வைத்து சமநிலையை பேணினால் நிலைமை மோசமாகாது.

மற்ற மாதங்களை விட, பிப்ரவரி மாதம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். உங்கள் காதல் துணையை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். சிறு சிறு சச்சரவுகள் தீர்க்கப்படும். 

ஒருதலை காதல் கொண்டுள்ள தனுசு ராசிக்காரர்கள் இந்த மாதம் உங்கள் காதலை வெளிப்படுத்தலாம். உங்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. 

உங்கள் காதல் வாழ்க்கையில், சச்சரவுகள் அதிகமாகலாம். புரிதல் குறையலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

கும்ப ராசிக்காரர்கள் தற்போது திருமணம் சம்பந்தமான விஷயங்களில் அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. குடும்பத்தில் ஒப்புதல் கிடைக்காமல் இருந்தால் பொறுமையாக இருப்பது நல்லது. மூன்றாவது நபரின் உறவுகளில் தலையிடுவது உறவில் கசப்பை ஏற்படுத்தும்.

உங்கள் காதல் துணைக்கு உங்களால் மகிழ்ச்சி கிடைக்கும். அவர் ஏதேனும் உணர்ச்சி மற்றும் மனரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டால், கண்டிப்பாக அவர்களுக்கு ஆதரவளிக்கவும். மீன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி இரண்டாம் வாரம் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link