FIFA உலகக் கோப்பையின் கடந்த ஐந்தாண்டு கோல்டன் பூட் சான்பியன்கள்

Mon, 18 Jul 2022-12:52 pm,

ஃபிஃபா உலகக் கோப்பை 2002 போட்டியில் பிரேசிலின் புகழ்பெற்ற ஸ்ட்ரைக்கர் ரொனால்டோ கோல்டன் பூட் வென்றார். இந்தப் போட்டியில் ரொனாடோ 8 கோல்களை அடித்து பிரேசில்  கோப்பையை வெல்ல முக்கியப் பங்காற்றினார். இறுதிப் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்திய பிரேசிலின் ஐந்தாவது உலகக் கோப்பை வெற்றி இதுவாகும்.

(Photograph:AFP)

ஜெர்மனியின் முன்னாள் முன்கள வீரர் மிரோஸ்லாவ் க்ளோஸ் 2006 FIFA உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்து தங்க காலணி பரிசு பெற்றார். போட்டியில் ஜெர்மனிக்காக 5 கோல்களை அடித்திருந்தாலும், அவரது அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. சர்வதேச கால்பந்தில் ஜெர்மனியின் எல்லா நேரத்திலும் அதிக கோல் அடித்தவர் மற்றும் FIFA உலகக் கோப்பைகளில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் மிரோஸ்லாவ் க்ளோஸ். (Photograph:AFP)

தாமஸ் முல்லர் 2010 FIFA உலகக் கோப்பையில் ஜெர்மனிக்காக விளையாடி 5 கோல்களைப் அடித்தார். டேவிட் வில்லா, டியாகோ ஃபோர்லான் மற்றும் வெஸ்லி ஸ்னெய்டர் ஆகியோர் தலா ஐந்து கோல்களை அடித்த்தாலும், முல்லருக்கு கோல்டன் பூட் எனப்படும் தங்கக் காலணி கிடைத்தது. (Photograph:AFP)

கொலம்பிய அட்டாக்கிங் மிட்ஃபீல்டர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், FIFA உலகக் கோப்பை 2014 இல் ஆறு கோல்களுடன் போட்டியின் அதிக கோல் அடித்ததற்காக தங்க காலணியைப் பெற்றார்.

(Photograph:AFP)

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பையில் இங்கிலாந்து நட்சத்திரம் ஹாரி கேன் தங்க காலணி பரிசாக பெற்றார். கைலியன் எம்பாப்பே, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ரொமேலு லுகாகு என பலருடன் கடுமையான போட்டியிட்டு இந்த மதிப்பு மிக்க காலணி விருதை அவர் வென்றார். (Photograph:AFP)

கடந்த தசாப்தத்தில் உலக கால்பந்தில் ஆதிக்கம் செலுத்திய ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இருவரும் உலகக் கோப்பையில் தங்க காலணியை வெல்லத் தவறிவிட்டனர். எனவே இவர்கள் இருவரும் இந்த சீசனில் கடைசியாக ஃபீபா போட்டிகளில் தங்க காலணியை பரிசாக வெல்லும் போட்டி அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link