டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த டாப் 5 இந்திய வீரர்கள்!
டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி நம்பர் 1 இடத்தில் உள்ளது. சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையை கூட இந்திய அணி கைப்பற்றி அசத்தியிருந்தது.
அதேபோல், முதல்முறையாக நடத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி சாம்பியன் ஆனது. அது ஒருபுறம் இருக்க, இந்திய தரப்பில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த டாப் 5 வீரர்களை இங்க காணலாம்.
5. சூர்யகுமார் யாதவ்: 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில், 216 ரன்களை சேஸ் செய்த போது சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஆனால், இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
5. யஷஸ்வி ஜெய்ஸ்வால்: 2023 ஆசிய விளையாட்டு போட்டியில் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் 48 பந்துகளில் சதம் அடித்தார். இந்த தொடரில் இந்திய அணி தங்கம் வென்றது.
3. கேஎல் ராகுல்: 2016இல் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 245 ரன்களை சேஸ் செய்த போது கேஎல் ராகுல் 46 பந்துகளில் சதம் அடித்தார். இருப்பினும் அந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.
3. அபிஷேக் சர்மா: நேற்று (ஜூலை 7) நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி ஓப்பனர் அபிஷேக் சர்மா 47 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணியும் 100 ரன்கள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது.
2. சூர்யகுமார் யாதவ்: கடந்தாண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 45 பந்துகளில் சதம் அடித்து இந்திய அணிக்கு 228 ரன்கள் என்ற இலக்கை அடைய உதவினார். அந்த போட்டியில் இந்தியா 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1. ரோஹித் சர்மா: 2017ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்தார். அந்த போட்டியில் இந்தியா 260 ரன்களை குவித்தது. இலங்கை அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.