T20 World Cup அணியில் இடம் பெறாத 5 கிரிக்கெட் வீரர்கள்…
பிருத்வி ஷா நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். அண்மையில் இலங்கை சுற்றுப்பயணத்தில் வரையறுக்கப்பட்ட ஓவர் அவர் தனது திறமையை வெளிப்படுத்தினார். இருப்பினும், ப்ரித்வி ஷா இந்த உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறவில்லை.
(புகைப்படம்: ட்விட்டர்)
இந்திய ஆல்-ரவுண்டர் க்ருணால் பாண்டே. ஒருநாள் போட்டிகளில் அவர் அரைசதம் அடித்தார். இருப்பினும், அவரால் பேட்டிங் மற்றும் பந்து வீசுதல் இரண்டிலும் பெரிய அளவு சோபிக்கவில்லை. எனவே, க்ருணால் பாண்ட்யா அணியில் இடம் பெறவில்லை.
வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் பேட்டிங்கிலும், பெளலிங்கிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். இருப்பினும், அவருக்கு ஏற்பட்ட காயம் அவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம்பெற முட்டுக்கட்டை போட்டது. (புகைப்படம்: AFP)
திறமைசாலியான ராகுல் தேவாடியா, டி 20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை. அவர் அடுத்த உலகக் கோப்பைக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.
(புகைப்படம்: ட்விட்டர்)
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இந்தியன் பிரீமியர் லீக்கின் சிறந்த நட்சத்திரம்,. ஆனால் சர்வதேச அளவில் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. எனவே அவர் டி 20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெறவில்லை.
(புகைப்படம்: AFP)