5 நிமிடத்தில் பாத்ரூம் கமகமக்கும் வாசம் வீச இந்த 5 டிப்ஸ் பாலோ பண்ணுங்க
இது வீட்டில் இருப்பவர்களுக்கும் ஒருவிதமான நெருடலை கொடுக்கும். ஆனால், இனி அப்படியான நெருடல் எல்லாம் படத்தேவையில்லை. வெறும் ஐந்து நிமிடத்தில் நீங்கள் உங்கள் பாத்ரூமை கமகமக்கும் வாசனை வரும் வகையில் சுத்தம் செய்துவிடலாம். அதற்கு நீங்கள் இந்த ஐந்து டிப்ஸை பாலோ செய்ய வேண்டும்.
பாத்ரூம் கிளினீங் எப்போது செய்ய வேண்டும்? - தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் பாத்ரூமை சுத்தம் செய்வது நல்லது. ஆனால் பெரும்பாலானோர் வாரம் இருமுறை அல்லது ஒருமுறை சுத்தம் செய்கின்றனர்.
அப்படி சுத்தம் செய்தாலும் போதுமான கிளினீங் சொல்யூஷன்களை பயன்படுத்துவதில்லை. இதற்கு அந்த சொல்யூஷன்கள் காஸ்டிலியாக இருப்பதும் ஒரு காரணம். ஆனால் வெறும் ஐந்து நிமிடத்தில் வீட்டிலேயே சொல்யூஷன்களை தயாரித்துவிடலாம்.
பாத்ரூம் சுத்தம் செய்ய ரெடிமேட் கரைசல் - பாத்ரூமை சீக்கிரம் சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது, எந்த விதமான கரைசலும் இல்லை என கவலைப்படாதீர்கள். சோப்பு மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் நிரப்பிக் கொள்ளுங்கள். அதனை வைத்தே தினமும் நீங்கள் பாத்ரூமை சுத்தம் செய்து கொள்ளலாம்.
பிரஷ் வைத்துக்கொள்ளுங்கள் - நீங்கள் ரெடிமேடாக தயார் செய்து வைத்திருக்கும் கரைசலை ஸ்பிரே பாட்டிலில் இருந்து பாத்ரூம் முழுவதும் தெளித்து விடுங்கள். பின்னர் நீங்கள் வைத்திருக்கும் பிரஷ் மூலம் அதனை நன்றாக தேய்த்து கழுவவும்
குளியலறை சுவர்களை சுத்தம் செய்யும் முறை - அதேபோல் குளியலறையில் தரைப்பகுதியை சுத்தம் செய்வதைப் போலவே சுவர்கள் மீது அந்த ஸ்பிரேவை அடிக்கவும். பின்னர் தண்ணீரைக் கொண்டு கழுவினால் அந்த கரைகளும் போய்விடும்.
டிஸ்யூ பேப்பர் கொண்டுகூட பாத்ரூம் சுவர் கரைகளை சுத்தம் செய்யலாம். ஒருவேளை குளியலறையில் நீங்கள் துணி துவைப்பீர்கள் என்றால், துணி துவைத்த உடனேயே பிரஷ்ஷைக் கொண்டு தரையை முழுவதுமாக சுத்தம் செய்துவிடுங்கள்.
சோப்பு, ஷாம்பூ ரேக் சுத்தம் - சோப்பு, ஷாம்பூ வைத்திருக்கும் ரேக்கையும் சுத்தம் செய்வது அவசியம். இந்த ரேக்கை டிஸ்யூ பேப்பரைக் கொண்டே சுத்தமாக அழுத்தி துடைத்து சுத்தம் செய்துவிடலாம்.
வாசனை திரவியங்கள் - பாத்ரூமில் கமகமக்கும் வாசனை வரவேண்டும் என்பதற்காகவே சில வாசனை திரவியங்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. மலிவு விலை முதல் அதிகமாக விலை வரை இந்த வாசனை திரவியங்கள் இருக்கின்றன. உங்களுக்கு ஏதுவான ஒன்றை தேர்வு செய்து, பாத்ரூமுக்காக பயன்படுத்துங்கள்.