Flipkart மெகா சேல் 2024 தேதி கசிந்ததா? நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்தும் இதோ..
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2024 (Flipkart Big Billion Days 2024) விற்பனை குறித்து முக்கியத் தகவல்
தீபாவளி மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை உள்ளிட்ட பண்டிகை காலம் விரைவில் நெருங்கி வருவதால், ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை விரைவில் தொடங்க உள்ளது.
பிக் பில்லியன் விற்பனையின் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் ஐசிஐசிஐ, ஆக்சிஸ் மற்றும் கோடக் வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் 10% உடனடி தள்ளுபடியைப் பெறுவதற்கு கடந்த காலத்தில் வாய்ப்பளித்துள்ளனர். மேலும், பஜாஜ் ஃபின்சர்வ் வழங்கும் சலுகைகள் மூலம் நுகர்வோருக்கு கட்டணமில்லா EMI-ல் கிடைக்கும்.
பிளிப்கார்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்பாக பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனை நடத்தும்.
இந்த விற்பனையின்போது மெகா தள்ளுபடிகள், ஆஃபர்கள் மற்றும் கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விற்பனை நாளை லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
பிளிப்கார்ட் ஈ-காமர்ஸ் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் 2024 விற்பனை தேதியை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், செப்டம்பர் 29 முதல் விற்பனை தொடங்கும் எனத் தெரிகிறது.
பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு செப்டம்பர் 29 நள்ளிரவு முதல் பிக் பில்லியன் டேஸ் 2024 சேவை கிடைக்கும். மற்ற வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் சேவை தொடங்கும்.
கடந்த ஆண்டு பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2023 விற்பனை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கக்து.