தொப்பை கரைய... கொழுப்பை எரிக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 10 கட்டளைகள்
![காலையில் அருந்த வேண்டிய பானம் Weight Loss Drink](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/09/26/436351-weight-loss-drink-1.jpg?im=FitAndFill=(500,286))
காலையில் அருந்த வேண்டிய பானம்: காலையில், வெறும் வயிற்றில் நீங்கள் அருந்தும் முதல் பானம் மெட்டபாலிசத்தை தூண்டும் வகையிலும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் வகையிலும் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் வெதுவெதுப்பான நீர் அல்லது சீரக நீர், இஞ்சி எலுமிச்சை சேர்த்த பானம், இலவங்கபட்டை நீர் போன்றவற்றுடன் தொடங்கலாம்.
![சாப்பிடும் முறை: Eating Habit](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/09/26/436342-eating.jpg?im=FitAndFill=(500,286))
சாப்பிடும் முறை: உடல் பருமனை குறைக்க விரும்பினால், முதலில் அவசரமாக சாப்பிடும் பழக்கத்தை விட்டு விட வேண்டும். உணவை நன்றாக மென்று நிதானமாக சாப்பிட வேண்டும். இப்பொழுது தான் உணவுடன் உமிழ்நீர் நன்றாக கலந்து செரிமானம் சிறப்பாக இருக்கும். செரிமான பிரச்சனை இருந்தால் உடல் எடை இழப்பு என்பது சாத்தியமில்லை.
![காலை உணவு](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/09/26/436348-breakfast-1.jpg?im=FitAndFill=(500,286))
காலை உணவு புரதம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அதோடு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களுக்கும் குறைவிருக்கக் கூடாது. ஒரு சமச்சீரான உணவு நாள் முழுவதும் ஆற்றலை கொடுக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகள், ஓட்ஸ், சிறுதானியங்கள் மற்றும் பருப்பு வகை உணவுகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.
இனிப்புகள்: அதிக சர்க்கரை சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இனிப்புகள் ஐஸ்கிரீம், கேக் போன்றவை, அதிக கலோரி மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த உணவுகள். சர்க்க்ரையை டயட்டில் இருந்து முற்றிலும் நீக்கினாலே வியக்கத்தக்க பலன்களைக் காணலாம்.
உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். அது கடினமாக பயிற்சியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களால் முடிந்த பயிற்சிகளை செய்யலாம். முடிந்த அளவு, லிப்ட் எஸ்கலேட்டர் போன்றவற்றை பயன்படுத்தாமல், படிக்கட்டுகளில் இருப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். அருகில் செல்லும் இடங்களுக்கு வாகனங்களில் செல்லாமல், நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மதிய உணவு: மதிய உணவில் ஜீரணிக்க எளிதான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் சோம்பல், அசதி ஏற்படாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். தேவையற்ற கொழுப்பு உடலில் சேருவது தவிர்க்கப்படும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: உடல் எடையை குறைக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், துரித உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. எப்போதாவது ஒருமுறை எடுத்துக் கொள்வதில் தவறில்லை.. ஆனால் வழக்கமாக்கிக் கொள்வது உடல் பருமன் மட்டுமல்லாது பலவித பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நல்ல தூக்கம்: உடல் பருமன் குறைய நல்ல தூக்கம் அவசியம். தூக்கமின்மையால் ஏற்படும் ஹார்மோன் சமநிலை இன்மை பசியை தூண்டுவதோடு, மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சியை மாற்றவும் பாதிக்கப்படும். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.
உணவைத் தவிர்க்கக் கூடாது: ஏதேனும் ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என்ற கருத்து பரவலாக உள்ளது. உணவை தவிர்ப்பதால் அதிக பசி ஏற்பட்டு, நம்மை அறியாமல் அதிக அளவிலான உணவை சாப்பிட்டு விடுவோம். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். எனவே சரியான நேரத்தில் சாப்பிடுவதை வழக்கமாக கொள்ளுங்கள்.
தண்ணீர்: உடல் பருமன் குறைய நீர்சத்து குறைபாடு இருக்கவே கூடாது. நாள் ஒன்றுக்கு குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது பசியைக் கட்டுப்படுத்துவதோடு, மெட்டபாலிஸம் சிறப்பாக இருக்கவும் உதவும்.
பொறுப்பு துறப்பு: ஆலோசனைகள் உள்ளிட்ட இந்த உள்ளடக்கம் பொதுவான தகவலை மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகையிலும் தகுதியான மருத்துவ சிகிச்சைக்கு மாற்றானது இல்லை. மேலும் தகவலுக்கு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது உங்கள் குடும்ப மருத்துவரை அணுகவும். இந்தத் தகவலுக்கு ZEE NEWS பொறுப்பேற்காது.