கல்யாண வாழ்க்கை கசக்காமல் இருக்க இதை செய்யுங்கள்!
துணையை ஏற்றுக்கொள்ளுங்கள்: துணையுடன் அடிக்கடி மோதல் மற்றும் சண்டைகள் வருவது இயல்பு தான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கையாக இருக்கிறது என எண்ணவிடாதீர்கள். சிறிய புரிதல் மட்டும் இருந்தால்போதும் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் வராது. அதாவது, துணையிடம் எதை ஏற்றுக் கொள்ள முடியும், எதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ப அவரிடம் அன்பு செலுத்துங்கள், வாழ்க்கை சுமூகமாகும்.
மகிழ்ந்திருக்க முயற்சி: திருமண உறவில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், அந்த மகிழ்ச்சிக்கு நீங்கள் புள்ளி வைக்க வேண்டும். அதாவது வேடிக்கையான விஷயங்களை தயங்காமல் செய்யுங்கள். அன்றாட செயல்களில் சின்ன சின்ன விஷயங்களில் நகைச்சுவையை கொண்டு வர முயற்சி செய்யுங்கள். நல்ல நினைவுகளாகவும் அவை எதிர்காலத்தில் இருக்கும்.
சண்டையை ஏற்றுக்கொள்ளுங்கள்: சண்டையில்லாத ஒரு உறவு இருக்க வாய்ப்புகள் இல்லை. அதுவும் திருமண உறவில் சாத்தியமில்லை. ஆனால், அதனை எப்படி ஏற்றுக் கொள்கிறோம் என்பதை பொறுத்ததான் உங்களின் மண வாழ்க்கை இருக்கும். ஒற்றுமைகளை கொண்டாடுங்கள். வேற்றுமகளை கவனத்தில் கொள்ளுங்கள்.
பொறுப்பை எடுத்துக்கொள்ளுங்கள்: திருமண உறவில் பொறுப்பை எடுத்துக் கொள்வது என்பது முக்கியம். வீட்டில் இருக்கும் பொறுப்புகளை இருவரும் அவரவர் சக்திக்கு ஏற்ப பகிர்ந்து கொள்ளும்போது பெரும்பாலான சிக்கல்களை தவிர்த்துவிடலாம். திட்டமிட்டு செயல்படுங்கள். அன்பு செலுத்த மறக்க வேண்டாம். உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.