கண் பார்வை கூர்மையாக ‘இவை’ உங்கள் டயட்டில் இருக்கட்டும்!
கண் பார்வையை கூர்மையாக்கும் விட்டமின் ஏ நிறைந்த சில சைவ உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம். முட்டை, கடல் மீன் போன்றவற்றில் வைட்டமின் ஏ நிறைந்திருப்பதைப் போல, சில சைவ உணவுகளிலும் விட்டமின் ஏ நிறைந்துள்ளது.
கேரட்: ஒரு நடுத்தர அளவிலான கேரட்டில் 10190 சர்வதேச வைட்டமின் ஏ உள்ளது. இது சராசரி தினசரி தேவையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின் (Beta Carotene) வடிவத்தில் உள்ளது. இது ஆரோக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும், எனவே கேரட்டை சாப்பிடுவது உங்கள் கண்பார்வையை மேம்படுத்தும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கலோரிகளில் குறைவாக உள்ளது. அவை வைட்டமின் ஏ சத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். இது தினசரி தேவையில் 400% க்கும் அதிகமாகும்.
தாக்காளி: ஒரு நடுத்தர அளவிலான தக்காளி உடலின் தினசரி வைட்டமின் ஏ தேவையில் 20 சதவீதத்தை வழங்குகிறது. இது தவிர, தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் நிறைந்துள்ளது.