Lungs Detox: நுரையீரலை செலவின்றி டீடாக்ஸ் செய்ய... சில சூப்பர் உணவுகள் இதோ..!
நமது சுவாசத்திற்கு ஆதாரமான நுரையீரலில், நச்சுக்கள் சேர்ந்து இருந்தால், சுவாசப் பாதை தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பலவிதமான பாதிப்புகள் உண்டாகும்.
சர்க்கரைக்கு ஆரோக்கியமான சிறந்த மாற்றாக கருதப்படும் வெல்லம், நுரையீரலில் சேரும் நிக்கோட்டினையும், பிற நச்சுக்களையும், அழுக்குகளையும் வெளியேற்றும் திறன் பெற்றது.
ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற வைட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள், நச்சுக்களை நீக்குவதோடு நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும் ஆற்றல் பெற்றது.
ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த மாதுளை, நுரையீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றவும், நுரையீரலுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்கும் வல்லமை படைத்தது. மேலும் இரும்புச்சத்து நிறைந்த மாதுளை நுரையீரலுக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
இஞ்சியில் காணப்படும் அழற்ச்சி எதிர்ப்பு பண்புகள், நுரையீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி, நுரையீரலை பலவிதமான நோய்களிலிருந்து தடுத்துக் காக்கிறது.
குர்குமின் என்ற ரசாயனம் நிறைந்த மஞ்சள் நுரையீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுவதோடு, நுரையீரலில் ஏற்படும் அழற்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் நுரையீரல் திசுக்களை பாதுகாக்கிறது.
குளோரோஃபில் நிறைந்த பச்சை இலை காய்கறிகள், நுரையீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற உதவும். மேலும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், நோய்களிலிருந்து நுரையீரலை காக்கும்.
கிரீன் டீ பருகுவதால், நுரையீரல் டீடாக்ஸ் செய்யப்படுவதோடு, அதில் உள்ள வீக்கம் குறைந்து, மூச்சு திணறல் சரியாகும். நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை தடுக்கவும் கிரீன் டீ உதவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.