Nervous system: நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் ‘சூப்பர்’ உணவுகள்!

Thu, 16 Nov 2023-9:23 pm,

நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, ​​உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. அதனால் பல பிரச்சனைகள் எழுகின்றன. ஆனால் உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் உங்கள் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம். அதற்கு உங்கள் டயட்டில் எந்தெந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

வைட்டமின் பி நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. முழு தானியங்களான கைக்குத்தல் அரிசி, பார்லி, திணை போன்றவற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளதால், இது உங்கள் நரம்புகளின் பலவீனத்தை நீக்குகிறது. 

உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது.  இது உங்கள் உடலின் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து. நரம்பு பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமின்றி, அனைவரும் பாதாம், முந்திரி, வாதுமை பருப்புகள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி, சி, ஈ, மெக்னீசியம், தாமிரம், ஃபோலேட் மற்றும் கால்சியம் ஆகியவை பச்சை காய்கறிகளில், அதிக அளவில் காணப்படுகின்றன. இது உங்கள் நரம்புகளின் பலவீனத்தை நீக்குகிறது. அவற்றை உங்கள் உணவின் சேர்த்து கொள்வது நரம்பு பிரச்சனைகளில் இருந்து உங்களைக் காக்கும்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நரம்புகளுக்கு பலம் தரும். மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அதனால் தான் மீன்களை உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link