கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாத... கருவின் வளர்ச்சியை பாதிக்கும் ‘சில’ உணவுகள்!
கர்ப்ப காலத்தில், உணவு விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். இல்லையென்றால், கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியும் கருவின் ஆரோக்கியமும் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.
கர்ப்ப காலத்தில் மிஞ்சிய உணவு பொருட்களை பிரிட்ஜில் வைத்து சாப்பிடும் பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும். இந்த உணவில் உருவாகும் பாக்டீரியாக்கள் வயிற்றில் வளரும் குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் தீங்கு விளைவிக்கும்.
கர்ப்ப காலத்தில் பால் குடிப்பது உங்க கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். ஆனால் பதப்படுத்தப்பட்ட பால் மட்டும் தான் அருந்த வேண்டும், அது அல்லாமல், பதப்படுத்தப்படாத பாலை குடிக்கும் போது அதில் உள்ள பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் முட்டை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது என்றாலும், வேக வைக்காத அல்லது பாதி மட்டுமே வேக வைத்த முட்டைகளை சாப்பிடுவது உங்க கருவில் வளரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.
செயற்கை இனிப்புகள் கருவின் ஆரோக்கியத்தை பாதிக்க கூடியது. செயற்கையான இனிப்பு குளிர்பானங்கள் கூட குறைப்பிரசவத்திற்கு வழி வகுக்கும் எனவும் சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மூலிகை தேநீர்கள் அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொடுத்தாலும் கர்ப்ப காலத்தில் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்வது ஆபத்து. பிறப்பின் போது குழந்தையின் எடை குறைவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
சரியாக சுத்தம் செய்யப்படாத முளைக்கட்டிய பயறு வகைகளில் கூட பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. இந்த முளைக்கட்டிய பயிறு வகைகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். அவை குடலில் தொற்று ஏற்பட வழி வகுக்கும். இது கருவுக்கு தீங்கு விளைவிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.