Football Crazy: கால்பந்து ரசிகர்களின் உற்சாகமும், அணிகளின் சங்கடமும்
இங்கிலாந்து vs டென்மார்க் - ஜூலை 8, 2021: யூரோ 2020 இல் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டென்மார்க் கோல்கீப்பர் காஸ்பர் ஷ்மிச்சலின் முகத்தில் லேசர் பேனாவின் மூலம் வெளிச்சத்தை பாய்ச்சினார் ஒரு ரசிகர். இது காஸ்பருக்கு இடைஞ்சலாக இருந்தாலும், அவர் சமாளித்துக் கொண்டார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் போட்டியில் வென்றது. 1966 உலகக் கோப்பைக்குப் பிறகு முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றாலும், ரசிகர்களின் குறும்பால் தற்போது விசாரணையை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி…
குரோஷியா vs செக் குடியரசு - ஜூன் 18, 2016: யூரோ 2016 இல் குரோஷியா Vs செக் குடியரசு மோதலின் போது, முன்னாள் நாட்டின் ரசிகர்கள் ஆடுகளத்தில் தீ பற்றி எரியும் பொருட்களை வீசினார்கள். அப்போது குரோஷியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அப்போது குரோஷியா ஆதரவாளர்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்.
குரோஷிய ரசிகர்கள் தங்கள் கால்பந்து சம்மேளனத்தின் மீதான நம்பிக்கையை இழந்ததே இந்த மோதலுக்கு காரணம். குரோஷிய கால்பந்து சம்மேளனம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
யங் பாய்ஸ் vs பாஸல் - செப்டம்பர் 24, 2018: ரசிகர்கள் ஆடுகளத்தில் பல்வேறு பொருட்களை வீசியுள்ளனர். ஆனால், , சுவிட்சர்லாந்தில் யங் பாய்ஸ் மற்றும் பாசலுக்கு இடையிலான போட்டியின்போது ரசிகர்கள் பிஎஸ் 4 கன்ட்ரோலர்கள் மற்றும் டென்னிஸ் பந்துகளை ஆடுகளத்தில் வீசினர்.
இதன் விளைவாக போட்டி இரண்டு நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது. யங் பாய்ஸ் மற்றும் பாசல் இடையிலான போட்டியில் யங் பாய்ஸ் 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
AEK ஏதென்ஸ் vs அஜாக்ஸ் - நவம்பர் 27, 2018: ஏதென்ஸில் நடைபெற்ற ஏ.இ.கே ஏதென்ஸுக்கும் அஜாக்ஸுக்கும் இடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மோசமான வன்முறை சம்பவங்கள் நடந்தேறின. சில ரசிகர்களுக்கு படுகாயம் ஏற்படுத்தி, ரத்தக்களரியை உருவாக்கினார்கள் ரசிகர்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் பெட்ரோல் குண்டு வெடிக்கப்பட்டதால் நிலைமை மோசமானது. வன்முறையை அடக்க கலகப் பிரிவு போலீசார் அழைக்கப்பட்டனர். இந்த மறக்க முடியாத போட்டியில் அஜாக்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
பிரைட்டன் Vs வெஸ்ட் ஹாம் - அக்டோபர் 6, 2018: பிரைட்டனுக்கும் வெஸ்ட் ஹாமுக்கும் இடையிலான பிரீமியர் லீக் போட்டியின் போது நடுவர் கெவின் பிரண்ட் களத்தில் இறங்கியபோது, அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை எதிர்கொள்வோம் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.
போட்டியின் போது கூட்டத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட செக்ஸ் பொம்மை ஒன்று அவர் மீது தூக்கி வீசப்பட்டது. அதைப் பார்த்த அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. முகம் சிவந்து போனது. அதற்குள் மற்றொருவர் அந்த செக்ஸ் பொம்மையை ஆடுகளத்திலிருந்து அகற்றியதால் நிலைமை சீரானது. அமென் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் பிரைட்டன் 1-0 என்ற கணக்கில் வென்றது.