Migraine: ஒற்றை தலைவலியை ஓட ஓட விரட்டும் வீட்டு வைத்தியங்கள்... இதோ
ஒற்றைத் தலைவலி என்பது ஒரு வகை நோயாகும், அதன் வலி மிகவும் வேதனையானது. இதில் தலையின் பாதியில் வலி தோன்றும். ஆனால் இதை தாங்குவது மிகவும் கடினம். குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றனர்.
ஒற்றைத் தலைவலி தாக்குதல் ஏற்படும்போதெல்லாம், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.
ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற இலவங்கப்பட்டையை பயன்படுத்தலாம். இலவங்கப்பட்டையில் தலைவலி பிரச்சனையை குணப்படுத்தும் பல சத்துக்கள் உள்ளன.
இஞ்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஒற்றை தலைவலி போன்ற கடுமையான வலிக்கும் இஞ்சி உதவிகரமாக இருக்கும். உங்களுக்கு ஒற்றை தலைவலி இருக்கும் போதெல்லாம் இஞ்சி டீ குடியுங்கள்.
காபி குடிப்பதால் ஒற்றைத் தலைவலியில் இருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைவலி இருந்தால் கருப்பு காபி குடிக்கலாம். அதிக அளவு சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட சத்தான உணவுகளை உண்பது மிகவும் அவசியம். சத்தான உணவை எடுத்துக் கொண்டால் ஒற்றைத் தலைவலி பிரச்சனைகள் குறையும். சத்தான உணவு ஒற்றைத் தலைவலியைத் தவிர மற்ற நோய்களையும் தீர்க்கும்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒற்றைத் தலைவலி தாக்குதல்கள் அதிக மன அழுத்தம், மது அருந்துதல், சிகரெட், நீரிழப்பு ஆகியவற்றால் வருகின்றன. சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது அவசியம்.