உதயநிதி மூலம் திமுகவுக்கு வர தயாரான முன்னாள் முதலமைச்சர் மகன்..!

Mon, 30 Sep 2024-6:21 pm,

தேனி நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக இருந்த ரவீந்திரநாத் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அங்கு போட்டியிடவில்லை. இதனால் அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். 

அமமுக நிறுவனர் டிடிவி தினகரன் அங்கு போட்டியிட்டாலும், சிட்டிங் எம்பியாக இருந்த ரவீந்திர நாத் அங்கு போட்டியிட்டிருந்தால் களம் இன்னும் போட்டியாக இருந்திருக்கும். ஆனால், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு காரணமாக அந்த தொகுதியில் அவர் களம் காணவில்லை. இப்போது தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்கும் அவர், அண்மைக்காலமாகவே புதிய கட்சி ஒன்றில் இணைய திட்டமிட்டுக் கொண்டிருந்தார். 

விஜய்யின் தவெக கட்சிக்கு செல்வார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், ரவீந்திர நாத் திமுகவுக்கு செல்லவே விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளராக திமுக கட்சிக்குள்ளும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கிறார். வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் உதயநிதியின் தலையீடு இப்போது அதிகரித்திருக்கிறது.

அதனால் அவர் வழியாக திமுகவுக்குள் செல்ல முடிவெடுத்துவிட்டார். உதயநிதி துணை முதலைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் ரவீந்திரநாத், தமிழகத்தை முன்னேற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த முதலைமசர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார். 

இந்த பதிவின் மூலம் அவர் திமுகவுக்கு செல்ல ஆயத்தமாகிவிட்டது தெரிகிறது. ஆனால் திமுக தரப்பில் இருந்து எப்போது கிரீன் சிக்னல் கிடைக்கும் என்பது தான் ரவீந்திரநாத்தின் இப்போதை எதிர்பார்ப்பு. தேனி மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் தங்க தமிழ் செல்வன், ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத்தை எதிர்த்து தான் அரசியல் செய்து திமுகவுக்கும் வந்திருக்கிறார். 

இப்போது ஓபிஎஸ் குடும்பம் திமுகவுக்கு வந்தால் அதனை தங்க தமிழ் செல்வன் ஏற்பாரா என்ற சிக்கல் இருக்கிறது. ஒருவேளை தங்க தமிழ்செல்வனும் ஓகே சொல்லிவிட்டால், ரவீந்திரநாத் திமுக வருகை என்பது சீக்கிரம் நடக்கும். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link