Indian Oil-HDFC Bank இன் இந்த சலுகையில் 50 லிட்டர் பெட்ரோல் இலவசமாக பெறுங்கள்!
இந்த கிரெடிட் கார்ட் மூலம் நீங்கள் பெட்ரோலை வாங்கினால், நீங்கள் செலவழிக்கும் பணத்தில் 5 சதவீதத்தை எரிபொருள் புள்ளிகளாகப் பெறுவீர்கள். இந்தியன் ஆயில் அவுட்லெட்டில் ஒவ்வொரு மாதமும், முதல் 6 மாதங்களில் அதிகபட்சம் 50 எரிபொருள் புள்ளிகளைப் பெறுவீர்கள்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, நீங்கள் அதிகபட்சம் 150 எரிபொருள் புள்ளிகளைப் பெறலாம். இது தவிர, மற்ற ஷாப்பிங்கிற்கும் 150 ரூபாய் செலவழிக்க 1 எரிபொருள் புள்ளி சேர்க்கப்படுகிறது. இந்த எரிபொருள் (Fuel) புள்ளிகளை ரெடீம் செய்து நீங்கள் ஆண்டுதோறும் 50 லிட்டர் வரை பெட்ரோல் மற்றும் டீசலைப் பெறலாம்.
இந்தியன் ஆயில் HDFC வங்கி கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, நீங்கள் உறுப்பினர் கட்டணமாக ரூ .500 மற்றும் அதற்கேற்ற ஜி.எஸ்.டி.-ஐ செலுத்த வேண்டி இருக்கும். இந்த அட்டையின் அனைத்து அதிகாரங்களும் வங்கியிடம் இருக்கும்.
இந்த கார்டுக்கு 21 வயது முதல் 60 வயது வரையிலான வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். நீங்கள் பணியில் இருந்தால், உங்கள் நிகர மாத வருமானம் குறைந்தது 10,000 ரூபாயாக இருக்க வேண்டும். உங்களது இந்த கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டால், தயவுசெய்து 24 மணி நேரத்திற்குள் அதை தெரிவித்து விடவும். புதிய அட்டைக்கு உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.
பெங்களூரு, சென்னை, டெல்லி, குருகிராம், மும்பை (தானே, வாஷி உட்பட), புனே, ஹைதராபாத் (செகந்திராபாத் உட்பட) ஆகியவற்றில் இந்தியன் ஆயில் HDFC வங்கி கடன் அட்டை சலுகை வழங்கப்படவில்லை. HDFC வங்கி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால், உங்கள் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் ஆண்டுதோறும் 6 லட்சமாக இருந்தால்தான் நீங்கள் இந்த அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.
பெட்ரோலிய நிறுவனங்கள் (Petrol Companies) செவ்வாய்க்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் அதிகரித்தன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் 35 முதல் 38 பைசா வரை அதிகரிக்கப்பட்டது. டெல்லியில் பெட்ரோல் ரூ .90.93 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ .81.32 ஆகவும் உள்ளது. மும்பையில் பெட்ரோல் ரூ .97.34 ஐ எட்டியுள்ளது. நாட்டின் பல நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .100 ஐ நெருங்கியுள்ளது.