SonyLiv, Hostar இலவசம்... அள்ளிவீசும் வோடபோன் ஐடியா... எந்தெந்த பிளான்களுக்கு தெரியுமா?

Mon, 10 Jun 2024-10:40 pm,

Disney+ Hotstar தளத்தில் தற்போது ஐசிசி டி20 உலகக் கோப்பையை நீங்கள் காணலாம். மொபைலில் இலவசமாக காணலாம் என்றாலும் மற்ற சாதனங்களில் பார்க்க சந்தா தேவைப்படும். SonyLiv தளத்தில் யூரோ கோப்பை கால்பந்து தொடரை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

 

ரூ. 169 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: புதிய சிறப்பு டேட்டா Add On ப்ரீபெய்டு பயனர்களுக்கு மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மொபைல் சந்தா இலவசமாகும். இருப்பினும், இந்த பேக் 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இதில் மொத்தம் 8 ஜிபி டேட்டா கிடைக்கும்.

 

ரூ.82 ப்ரீபெய்ட் திட்டம்: SonyLIV பிரீமியம் 28 நாள் இலவசமாகும். இருப்பினும், இந்த திட்டம் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் 4ஜிபி டேட்டா கிடைக்கும்.

 

ரூ.369 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: இதில் 30 நாட்களுக்கு SonyLIV பிரீமியம் திட்டம் இலவசமாக கிடைக்கும். வேலிடிட்டியும் 30 நாள்களாகும். இதில் ஒருநாளுக்கு 2ஜிபி டேட்டாவை பெறுவீர்கள், அன்லிமிடேட் காலிங் வசதியும் இதில் உள்ளது. 

 

ரூ. 903 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: இதில் SonyLIV பிரீமியம் மொபைலுக்கானது 90 நாள்கள் இலவசமாக கிடைக்கும். ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும். 90 நாட்கள் வேலிடிட்டி இருக்கிறது. வரம்பற்ற அழைப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.

 

ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டம்: 20ஜிபி டேட்டாவையும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் ஒரு வருடம் இலவசமாக கிடைக்கும்.

 

ரூ.100 போஸ்ட்பெய்ட் Add-On திட்டம்: 10ஜிபி டேட்டா மற்றும் SonyLiv பிரீமியம் (டிவி+மொபைல்) சந்தா கிடைக்கும்.

 

Vi Max மற்றும் Vi Family திட்டங்களில் ரூ.401 ரீசார்ஜில் Disney+ Hotstar மற்றும் SonyLIV பிரீமியம் மெம்பர்ஷிப்கள் இரண்டையும் நீங்கள் பெறலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link