Heart Alert: அடிக்கடி இந்த பிரச்சனை வருதா? எச்சரிக்கை! இவை மாரடைப்பு அறிகுறிகள்
மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும்போது தான் இதயம் செயலிழக்கிறது. அந்த மோசமான நிலை வருவதற்கு முன்னதாக உடல் காட்டும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் இருந்தால் மாரடைப்பு அபாயத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
சர்வதேச அளவில் ஆண்டுதோறும் 1.79 கோடி பேர் இதய நோயால் இறக்கின்றனர். எனவே இதயம் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் அவசிய்ம்
பலவீனமாக உணர்வது என்பது பொதுவாக உடலின் உள்ளே ஏதேனும் நோய் அல்லது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காததால் ஏற்படுகிறது. ஆனால் சில நேரங்களில் பலவீனம் சில அபாயகரமான நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். மாரடைப்பு அல்லது இதயம் தொடர்பான வேறு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும். எனவே, நீண்ட காலமாக பலவீனத்தை உணர்ந்தால், அதை புறக்கணிக்கக்கூடாது.
தொடர்ந்து சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டால், அது இதயம் தொடர்பான நோய்களால் ஏற்பட்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீண்ட காலமாக இந்த பிரச்சனைகள் இருந்தால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் அல்லது சுவாசம் தொடர்பான வேறு ஏதேனும் அறிகுறிகள் மீண்டும் மீண்டும் இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும்
இடது பக்கத்தில் வலி ஏற்பட்டால், அது நரம்புகள், தசைகள் அல்லது எலும்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வலி ஏற்படுவது இதயம் தொடர்பான சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது. உடலின் இடது பகுதியில், குறிப்பாக மார்பு, கழுத்து, தாடை அல்லது முகத்தின் இடது பக்கம் அல்லது இடது கையில் வலி இருந்தால், இந்த அறிகுறிகள் மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்
மாரடைப்புக்கு முன், தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி போன்ற அறிகுறிகள் சிலருக்குக் ஏற்படும். குறிப்பாக இந்த அறிகுறிகள் தொடர்ந்து உணரப்பட்டால், இதய பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம்.
நெஞ்சு வலி என்பது மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் உட்பட பல்வேறு நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக அடிக்கடி நெஞ்சு வலி அல்லது மரத்துப்போனால் மருத்துவரை அணுகவும். ஏனென்றால், இந்த அறிகுறிகள் இதயம் தொடர்பான நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை