நினைத்ததெல்லாம் நிறைவேற வெள்ளிக்கிழமை வழிபாடு! சுக்கிரனை மகிழ வைக்கும் லட்சுமி பூஜை!
வெள்ளிகிழமை என்றாலே மங்களகரமான நாள் ஆகும். அன்னை மகாலட்சுமிக்கு உரிய நாளான இது சுக்கிரன் கிரகத்துடனும் தொடர்புடையது.
சுக்ரன் என்ற வடமொழி வார்த்தையின் தமிழ்பொருள் வெள்ளி என்பது தான். வெள்ளிக்கிழமை என்பது நவகிரகங்களில் சுக்கிரனுக்கு உரிய நாள்.
சுக்கிரன், வாழ்க்கையில் சுகங்களை கொடுப்பதற்கு அதிபதி என்றால், மகாலட்சுமி கொடுக்கும் செல்வ வளம் இல்லாமல் சொகுசு வாழ்க்கை சாத்தியப்படாது
பணம், செல்வம் இருந்தால் வாழ்க்கை வளமாகும் என்பது நிதர்சனமான உண்மை. எனவே தான், இந்த உண்மையை உணர்த்தும் வகையில் வெள்ளிக்கிழமை - சுக்கிரன் - லட்சுமி அன்னை என மூன்றும் தொடர்புடையதாக உள்ளது
சுக்கிர பகவானை வழிபடாவிட்டால் கூட, வெள்ளிக்கிழமையில் லட்சுமி தேவியை வழிபட்டால் சுக்கிரனின் அருள் தானாகவே வந்து சேரும்
வெள்ளிக்கிழமை விஷ்ணுபத்னியை வழிபட்டால், சுக்கிரனின் அருள் மட்டுமல்ல, நவகிரகங்கள் அனைத்தின் அருளும் ஆசியும் கிடைக்கும்
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் (காலை பத்தரை முதல் 12 மணி வரை) நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வாழ்வில் வளங்களை கொண்டு வந்து சேர்க்கும்
பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது