ட்ரோன் முதல் பண்ணை வரை..எம்எஸ் தோனியின் முதலீடுகள்!

Fri, 10 Jun 2022-1:36 pm,

தோனி ஒரு தடகள வீரர் என்பதால் ஃபிட்னெஸ் சொல்யூஷன்களை வழங்கும் தொழிலில் இறங்கியுள்ளார்.  2011-ல்  உலகக் கோப்பை வென்ற பின், இந்தியா முழுவதும் 'ஸ்போர்ட்ஸ்ஃபிட் வேர்ல்ட்' என்ற பெயரில் 200க்கும் மேற்பட்ட ஜிம்களை வைத்திருக்கிறார்.

 

2016 ஆம் ஆண்டில், தோனி சொந்த லைஃப்ஸ்டைல் பிராண்டான 'SEVEN'-ஐ அறிமுகப்படுத்தினார், அவரது ஐகானிக் ஜெர்சி எண் பெயராக வைக்கப்பட்டுள்ளது.  SEVEN நிறுவனம் ஆடை மற்றும் காலணிகளை விற்பனை செய்கிறது, இந்நிறுவனத்தின் உலகளாவிய பிராண்ட் தூதராகவும் தோனி உள்ளார்.

 

இந்திய ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் மற்றும் மேனேஜ்மெண்ட் நிறுவனமான ரித்தி ஸ்போர்ட்ஸில் தோனி பங்குகளை வைத்துள்ளார்.  இந்த நிறுவனத்தை ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் கையாளுகின்றனர்.

 

கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தோனி ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது நேரத்தை செலவழித்து வருகிறார்.  இங்கு காய்கறிகள் மற்றும் பழங்களை விவசாயம் செய்து வருகிறார், 43 ஏக்கர் பண்ணை வீட்டில் சுமார் 10 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி ஸ்ட்ராபெர்ரி, முட்டைக்கோஸ், தக்காளி, ப்ரோக்கோலி, பட்டாணி, ஹாக் மற்றும் பப்பாளி போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.  இதில் விளையும் பொருட்களை அவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்பதாக கூறப்படுகிறது.

 

2021 ஆம் ஆண்டில், தோனி பெங்களூரை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் Katabook-ல் முதலீடு செய்தார் மற்றும் அந்தண் பிராண்ட் அம்பாசிடராகவும் ஆனார்.  ஸ்டார்ட்அப் இதுவரை 29 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியுள்ள நிலையில், மஹி தனது பணத்தையும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள சிறு வணிகங்கள் தங்கள் சொந்த கணக்குகள் மற்றும் லெட்ஜர்களை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்க Katabook உதவுகிறது.  இது ஒரு வருடத்திற்குள் 12 மொழிகளில் 5 கோடி பதிவு செய்யப்பட்ட வணிகர்களை எட்டியுள்ளது.      

MS தோனியின் பிரபலமான வணிக முதலீடுகளில் ஒன்று மஹி ரெசிடென்சி என்கிற பெயரில் செயல்பட்டு வரும் ஹோட்டல்.  இது குறித்து பலருக்கும் தெரியாது, மேலும் தோனிக்கு சொந்தமான ஹோட்டலுக்கு வேறு யாரும் உரிமையும் இல்லை.  இது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமைந்துள்ளது      

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுடன் பிரபல இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) உரிமையாளரான தோனி சென்னை எஃப்சியின் இணை உரிமையாளராகவும் இருக்கிறார்.  ஐஎஸ்எல்லில் சென்னையின் எஃப்சியின் ஆட்டங்களின் போது மஹி அடிக்கடி காணப்பட்டார்.      

ஆகஸ்ட் 2019-ல் அடுத்த தலைமுறை இ-காமர்ஸ் தளமான CARS24 உடன் தோனி ஒரு கூட்டணியை ஏற்படுத்தியுள்ளார்.  ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தோனி CARS24 இல் பங்குகளை வைத்திருப்பதோடு அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் செயல்படுகிறார்.       

கடந்த ஆண்டு ஏப்ரலில் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு நிறுவனமான 7InkBrews அதன் பிராண்ட் அம்பாசிடராக தோனியை நியமித்தது, இதில் அவர் பங்குகளையும் வைத்துள்ளார்.  இந்த நிறுவனம் தோனியின் ஜெர்சி எண்ணால் ஈர்க்கப்பட்டு தனது புதிய தயாரிப்புகள், கைவினைப்பொருட்கள் சாக்லேட்டுகள் மற்றும் பானங்களை Copter7 என்கிற பிராண்ட் பெயரில் முன்பு அறிமுகப்படுத்தியது.

 

சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் தோனி வெளியிடப்படாத தொகையை முதலீடு செய்துள்ளார், இந்த நிறுவனம் இந்தியாவின் முன்னணி ட்ரோன் சேவை வழங்குநராக உள்ளது.  மேப்பிங், சுத்திகரிப்பு, விவசாயம் தெளித்தல், பாதுகாப்பு, விநியோகம் மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட 38 பல்வேறு பயன்பாடுகளுக்காக நிறுவனம் ட்ரோன்களை வடிவமைத்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link