Film Stars: அதிகம் படித்த திரை நட்சத்திரங்கள், மாதவன் முதல் அனுஷ்கா சர்மா வரை

Sun, 21 Mar 2021-5:23 pm,

ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90% மதிப்பெண் வாங்கியவர்.  பிடித்தார். அதன் பிறகு Architecture (கட்டிடக்கலை) படித்து பட்டம் பெற்றார்.

ஆர் மாதவன் எலெக்ட்ரானிக்ஸ் பட்டதாரி ஆவார், மேலும் ராயல் ஆர்மி, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றவர். அவர் தனது கல்லூரி நாட்களில் ஒரு சந்தர்ப்பத்தில் கனடாவில் கலாச்சார தூதராக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

திரையுலகில் உயர்ந்த நடிகரான அமிதாப் பச்சனின் தந்தை பிரபல இந்தி கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சன். திரைத்துறையில் மெகா வெற்றி பெற்ற அமிதாப் பச்சன், டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை படித்தார். அதன் பிறகு, கிரோரி மால் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் அமிதாப் பச்சனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பித்துள்ளது.

அனுஷ்கா சர்மா பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியில் கலைப் பட்டம் பெற்றார். பிறகு தொலைதூர கல்வி முறையில், பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 

பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் கம்யூனிகேஷன் ஸ்டடீஸில் இருந்து மாஸ் கம்யூனிகேஷனில் முதுகலை பட்டமும் பெற்றவர்.

ப்ரீத்தி ஜிந்தா ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும் (ஹானர்ஸ்) மற்றும் குற்றவியல் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றார்.

நடிகர் இம்ரான் கான் ஃப்ரீமாண்ட் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். பின்னர் நியூயார்க் ஃபிலிம் அகாடமியின் லாஸ் ஏஞ்சல்ஸ் கிளையில் படித்து பட்டம் பெற்றார்.

பரினிதி சோப்ரா, இங்கிலாந்தின் மான்செஸ்டர் பிசினஸ் ஸ்கூலில் வணிக, நிதி மற்றும் பொருளாதாரத்தில் படித்து பட்டம் பெற்றவர்.

நடிகர் ஜான் ஆபிரகாம் மும்பையின் ஜெய் ஹிந்த் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். Mumbai Educational Trust (MET)யில் முதுகலை மேலாண்மை அறிவியல் பட்டம் பெற்றவர்.

நடிகர் என்பதோடு, சமூக தொண்டாற்றுபவர் என்பதோடு, நாக்பூரில் உள்ள யேஷ்வந்திராவ் சவான் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர் சோனு சூத்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link