விரைவில் அறிமுகமாகும் Galaxy S22 FE 5G! இத்தனை சிறப்பம்சங்களா!
சாம்சங் கேலக்சி S22 FE 5ஜி ஸ்மார்ட்போனில் புதிய சாம்சங் செயலி மற்றும் கேமரா சென்சார் இருக்கலாம் என்றும், இதில் 4nm எக்ஸைனோஸ் 2300 சிப்செட் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய கேலக்சி எஸ்21 ஸ்மார்ட்போனில் 12எம்பி சென்சார் உள்ளது ஆனால் தற்போது வரக்கூடிய எஸ் 22 ஸ்மார்ட்போனில் 108 எம்பி சென்சார் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் எஃப்ஹெச்டி + டிஸ்பிளேவை கொண்டுள்ளது மற்றும் பின்புறத்தில் 50 எம்பி ட்ரிபிள் கேமராவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் உள்ள அல்ட்ரா-வைட் கேமரா உதவியுடன் நீங்க 123 டிகிரி பீல்டு வியூ கொண்ட காட்சிகளை திறம்பட பதிவு செய்ய முடியும்.
சாம்சங் கேலக்சி S22 FE 5ஜி ஸ்மார்ட்போனானது 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் 15w சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.