ULVZ: பூமிக்கு அடியில் அதிசயமூட்டும் பிரம்மாண்டமான நிலத்தடி மலைத்தொடர்கள்!

Fri, 09 Jun 2023-3:06 pm,

எவரெஸ்ட்டை விட 3 முதல் 4 மடங்கு பெரிய நிலத்தடி மலைத்தொடர்கள் பூமியின் மையப்பகுதிக்கு அருகில் காணப்படுகின்றன

அதிக அளவிலான நிலநடுக்கங்கள் மற்றும் அணு வெடிப்புகளால் உருவாக்கப்பட்ட நில அதிர்வுத் தரவுகளால் இவை கண்டறியப்பட்டன

இந்த மலைகள் எவ்வளவு பெரியவை? எவரெஸ்ட் சிகரம் மேற்பரப்பில் இருந்து 5.5 மைல் உயரத்தில் உள்ளது, இந்த நிலத்தடி மலைகள் 24 மைல் உயரத்திற்கு மேல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்டார்டிகாவில் உள்ள நில அதிர்வு மையங்களின் தரவுகளைப் பயன்படுத்தி, இந்த வியக்கத்தக்க பெரிய "மலைகளை" பூமியின் மையத்திற்கும் மேற்பரப்பிற்கும் இடையிலான எல்லையில், சுமார் 1,800 மைல் ஆழத்தில் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர் 

அண்டார்டிகாவில் இருந்து 1000 நில அதிர்வு பதிவுகளை பகுப்பாய்வு செய்ததில், உயர்-வரையறை இமேஜிங் முறையானது, ஆய்வு செய்த எல்லா இடங்களிலும் CMB [கோர்-மேன்டில் எல்லையில்] மெல்லிய முரண்பாடான பகுதிகளைக் கண்டறிந்துள்ளது என்று அரிசோனா மாநில பல்கலைக்கழக புவி இயற்பியலாளர் எட்வர்ட் கார்னெரோ தெரிவித்தார்.

இந்த மலைகள் எப்படி உருவானது? இந்த பண்டைய வடிவங்கள் கடல் மேலோட்டங்கள் பூமியின் உட்புறத்தில் அழுத்தப்பட்டபோது உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்

பூமியின் காந்தப்புலத்தை உருவாக்குவதற்கு பூமியின் மையப்பகுதி பொறுப்பாகும். எரிமலை வெடிப்பின் போது அதிலிருந்து சில பொருட்கள் பூமியின் மேற்பரப்பு வரை வெளியேற்றப்படலாம்.

நம்முடையது போன்ற நில அதிர்வு ஆய்வுகள், நமது கிரகத்தின் உட்புற கட்டமைப்பின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் இமேஜிங்கை வழங்குகின்றன, இந்த அமைப்பு நாம் நினைத்ததை விட மிகவும் சிக்கலானது என்பதை கண்டறிந்துள்ளோம் என்று, இந்த ஆய்வின் இணை ஆசிரியரும் அலபாமா பல்கலைக்கழக புவியியலாளருமான சமந்தா ஹேன்சன் தெரிவித்துள்ளார்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link