டபுள் வருமானம், பணத்திற்கு 100% பாதுகாப்பு: அசத்தலான தபால் அலுவலக சேமிப்பு திட்டம்

Tue, 06 Feb 2024-5:30 pm,

இன்றைய காலகட்டத்திலும் அஞ்சல் அலுவலக திட்டங்கள் பணத்தை சேமிப்பதற்கான பாதுகாப்பான வழியாக கருதப்படுகின்றன. இந்த பதிவில் ஐந்து ஆண்டிற்கான தபால் அலுவலக நேர வைப்புத் திட்டம் அதாவது Post Office Time Deposit Scheme பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களின் பணம் இரட்டிப்பாவதுடன் இதில் கூட்டு வட்டியின் பயனும் கிடைக்கிறது.

2023 ஏப்ரல் ஒன்று முதல் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 7.5% வட்டியை பெற்று வருகிறார்கள். ஒரு முதலீட்டாளர் இந்த திட்டத்தில் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மெச்யூரிட்டியின் போது அவருக்கு 7,24,974 ரூபாய் கிடைக்கும். இந்த திட்டத்தில் வட்டியாக மட்டுமே சுமார் 2,24,974 ரூபாய் கிடைக்கும். மீதமுள்ள ஐந்து லட்சம் ரூபாய் நீங்கள் திட்ட துவக்கத்தில் முதலீடு செய்த தொகையாகும்.

இந்த திட்டத்தின் கால அளவை நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்தால் ஐந்து லட்சத்திற்கு பதிலாக முதலீட்டாளருக்கு 10 லட்சம் ரூபாய் கிடைக்கும். மெச்சூரிட்டியின் போது மொத்த தொகையாக பத்து ஆண்டுகளில் 10,51,175 ரூபாய் கிடைக்கும்.  இதில் வட்டித்தொகை மட்டுமே 5,51,175 ரூபாயாக இருக்கும். அதாவது இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளில் உங்கள் பணம் இரட்டிப்பாவதற்கான முழுமையான உத்தரவாதம் உள்ளது.

இந்தத் திட்டத்தில் நீங்கள் 100 ரூபாயின் மடங்குகளில் முதலீடு செய்யலாம். தபால் அலுவலக டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய எந்த வரம்பும் இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை (Interest Rates) நிதி அமைச்சகம் (Finance Ministry) மதிப்பாய்வு செய்கிறது.

 

உங்கள் அருகில் உள்ள தபால அலுவலகத்திலேயே இந்த திட்டத்தை திறக்கலாம். இதில் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. பத்து வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் இதில் முதலீடு செய்ய முடியும். 

அஞ்சல் அலுவலக டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீட்டாளர் 1 வருடம், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் வரை பணத்தை முதலீடு செய்யலாம்.

இந்த தபால் அலுவலக திட்டத்தை முதலீட்டாளர்களுக்கு வரி சலுகையும் கிடைக்கும். வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வரி விலக்கு (Tax Exemption)கிடைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link