கொலஸ்டிராலை எரித்து, மாரடைப்பு அபாயத்தை பெரிதும் குறைக்கும் இஞ்சி..!!
இஞ்சியை எடுத்துக் கொள்வதால் கொலஸ்ட்ரால், ஒற்றைத் தலைவலி, மாரடைப்பு, இரத்த அழுத்தம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றை தீர்க்க பெரிதும் உதவும். அதன் மருத்துவக் குணங்கள் முழுமையாக கிடைக்கும் . இதைத் தவிர, இஞ்சியை பச்சையாக இஞ்சி சாப்பிடுவதால் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு: வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இஞ்சியில் ஏராளமாக உள்ளன, இதன் காரணமாக பல நோய்கள் அகற்றப்படுகின்றன. மறுபுறம், இஞ்சியை பச்சையாக உட்கொள்வதன் மூலம், சளி மற்றும் இருமல் போன்ற வைரஸ் தொற்றுகளை பெருமளவில் தவிர்க்கலாம்.
செரிமான சக்தி வலுப்படும்: இது தவிர, செரிமானத்தை வலுப்படுத்தவும் இஞ்சி பெரிதும் உதவுகிறது. இதை சாப்பிடுவதால் செரிமான செயல்முறையும் மேம்படும். இது தவிர, இஞ்சி புற்றுநோயைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
வாந்தியை போக்கும்: உங்களுக்கு வாந்தி ஏற்பட்டால் பச்சை இஞ்சியை உட்கொள்ளலாம். இது நிச்சயமாக உங்களுக்கு உதவும்.
சரியான நேரத்தில் மாதவிடாய் வராத பெண்களும் இஞ்சியை சாப்பிடலாம். இதன் மூலம் அவர்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். மாதவிடாயின் போது ஏற்படும் வலியும் நிவாரணம் பெறும்.
(துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)