மக்களே முக்கிய தகவல்! தங்கம் விலை ஒரு லட்சத்தை எட்டப்போகுது....!
தங்கம் வாங்கும் ஆசை இருந்தால் இப்போதே தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள் மக்களே. ஏனென்றால் இனி வரும் காலங்களில் தங்கம் விலை குறையவே வாய்ப்பில்லை. இது கவலையளிக்கும் விஷயமாக இருந்தாலும் அதுதான் நிதர்சனமான உண்மை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு கிராம் தங்கம் 7,375 ரூபாய்க்கும், 8 கிராம் தங்கம் 59 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது 24 காரட் தங்கம் 8 கிராம் 63 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இந்த விலையேற்றம் தங்கம் வாங்குவதை ஒரு கலாச்சாரமாக வைத்திருக்கும் நம் நாட்டு மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் உலக பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு பார்க்கும்போது தங்கம் மீதான முதலீடு பெருமளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக முதலீட்டாளர்களை விட உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளாக இருக்கும் சீனா மற்றும் அமெரிக்கா தங்கத்தின் மீது அதிகம் முதலீடு செய்ய தொடங்கியுள்ளன. தங்க இருப்பை இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
இதுவே தங்கம் விலை விரைவில் அதிகரிக்கப்போகும் என்பதற்கான மிகப்பெரிய சமிக்கை. இஸ்ரேல் -இரான் இடையே தொடங்கியிருக்கும் போர் மூன்றாம் உலகப்போருக்கு வித்திடும் என்ற அச்சம் நிலவுவதால் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன.
இப்போதைய உலக பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொள்ளும்போது இந்த ஆண்டு இறுதி, அதாவது டிசம்பர் மாத இறுதிக்குள் தங்கம் 60 ஆயிரம் ரூபாயை கடந்துவிடும் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
24 முதல் 36 மாதங்களுக்குள்ளாக ஒரு பவுன் தங்கம் விலை 1 லட்சத்தை எட்டிவிடும் என எச்சரித்துள்ளனர். அதற்கு முன்பாகவே ஒரு லட்சம் ரூபாய் விலையை தங்கம் எட்டிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.
பெரிய நிறுவனங்களும், தொழிலதிபர்களும் தங்கம் மீதான முதலீட்டை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர். பங்குச் சந்தையை கவனிக்கும்போது தங்கம் முதலீடு அதிகரிப்பதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.