ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி உயர்வு! ஒரு சவரன் தங்கம் 47,120 ரூபாய்!
சுபமுகூர்த்தம், நல்ல நாள், கல்யாணங்கள் என வரிசையாய் பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் இருப்பதால், தங்க விலை உயர்கிறது.
பாதுகாப்பான முதலீட்டு கருவியாகவும் கருதப்படுவதால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறது. மக்கள் 24 காரட் தங்கத்திலும் முதலீடு செய்கின்றனர்
ஆபரணத் தங்கத்தில் செய்யப்படும் முதலீடு இந்தியாவில் மிகவும் பிரபலமானது. அதனால் தான் பண்டிகை, திருமணம் என சுப நிகழ்வுகள் நடைபெறும் காலங்களில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்கிறதி
இன்றைய நிலவரப்படி இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலை 24 காரட் 10 கிராம் ₹ 64250 ஆகவும், 22 காரட் ₹ 58900 ஆகவும் உள்ளது.
தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் ரூ.47,120க்கு விற்பனையாகிறது
பிற முக்கியமான நகரங்களில் தங்கத்தின் விலை 22 காரட் தங்கம் கிராமுக்கு ₹ 5,845 ஆகவும், 24 காரட் தங்கம் கிராமுக்கு ₹ 6,375 ஆகவும் உள்ளது.
தங்கத்தின் விலை, சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே தங்கம் வாங்குபவர்கள், நேரடியாக விலையை சரி பார்த்துக் கொள்ளவும். ஜீ மீடியா பொறுப்பேற்காது