சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளை இனி கையில பிடிக்க முடியாது..!!

Fri, 26 Apr 2024-12:04 pm,

சனி வக்ர பெயர்ச்சி:  தற்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி இரவு 12:35 மணிக்கு வக்ர பெயர்ச்சி ஆவார். சனிதேவன் 15 நவம்பர் 2024 வரை வக்ர நிலையில் நீடித்து, அதன் பிறகு வக்ர நிவர்த்தி அடைவார்.

அதிர்ஷ்ட ராசிகள்: சனியின் வக்ர பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு சனியின் வக்ர நிலையினால் பலன்கள் சிறப்பாக இருக்கும் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள். 

மேஷ ராசியினருக்கு சனியின் வக்ர பெயர்ச்சி மிகுந்த பலன் தரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வீட்டில் அமைதி நிலவும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இதனுடன், சனி உங்களுக்கு மன வலிமையை வழங்குவார்.

 

ரிஷப ராசியினருக்கு சனியின் வக்ர பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். சில நல்ல செய்திகளைப் பெறலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு. பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பல வருமான ஆதாரங்கள் உருவாகும். இதனுடன், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உள்ளன.

சனியின் வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசியினருக்கு சாதகமாக அமையும். வருமானம் அதிகரிக்கும். இத்துடன் பணமும் வந்து சேரும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலை நன்றாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. இத்துடன் பூர்வீக சொத்துக்களிலும் லாபம் உண்டாகும்.

சனி பரிகாரங்கள்: ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் செய்தால், சனீஸ்வரருக்கு மகிழ்ச்சி அளிக்கும். அதேபோல கருப்பு எள் மற்றும் கருப்பு வஸ்திரம் தானம் செய்வதும் சனி பக்வானின் அருள் கிடைக்கும். கருப்பு நாய், காகம், கருப்பு நிற மாடு என விலங்குகளின் பசியாற்றினால் சனீஸ்வரரின் மனம் நெகிழும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. Zee News இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link