PVC ஆதார் அட்டை 5 நட்களில் வீடு வந்து சேரும்... விண்ணப்பிக்கும் முறை..!!

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களின் அடையாளத்துடன் தொடர்புடைய முக்கிய அரசு ஆவணமாகும். பள்ளி சேர்க்கை, வேலை, அரசு திட்டங்கள் என ஆதார் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. 

காகித ஆதார் அட்டை தவிர, இப்போது PVC ஆதார் அட்டை பெறும் வசதியும் உள்ளது. காகித வடிவிலான ஆதார் சீக்கிரம் கிழிந்து சேதமடையும் வாய்ப்பு உள்ளதால், பிவிசி ஆதார் அட்டை சிறந்த தேர்வாக இருக்கும்

1 /8

ஆதார் அட்டை (Aadhaar card) இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள நிலையில்,  காகித வடிவில் இருக்கும் ஆதார் அட்டைக்கு பதிலாக, புதிய பிவிசி ஆதார் அட்டைகளை பெறுவது எப்படி ஆன்லைன் மூலம் பெறுவது என்பதை அறிந்து கொள்ளலாம்.

2 /8

.உண்மையில், ஆதார் PVC கார்டு என்பது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற ஒரு பிளாஸ்டிக் அட்டை. இந்த அட்டை வளைந்தாலும் அல்லது தண்ணீரில் கரைந்தாலும் எந்த பிரச்சனையும் இருக்காது. இந்த அட்டையை எந்த பிரச்சனையும் இல்லாமல் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம்.

3 /8

PVC கார்டை யாரெல்லாம் வாங்கலாம்: ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஆதார் PVC அட்டையை பெற்றுக் கொள்ளலாம். PVC கார்டுக்கு குடிமக்கள் பெயரளவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்,

4 /8

UIDAI: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்த அட்டை பெறுவதற்கான ஆர்டரை நீங்கள் செய்யலாம். பிவிசி ஆதார் அட்டைக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.  

5 /8

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த வசதியை வழங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள்  PVC கார்டுக்கு ஆர்டர் செய்யலாம். இதற்கு, ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.

6 /8

ஆதார் தொடர்பான அதிகாரபூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in/genricPVC என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த  5 நாட்களில், விரைவு அஞ்சலில் ஆதார் அட்டை வீடு வந்து சேரும்.  

7 /8

ஆதார் அட்டை தொடர்பான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆர்டர் ஆதார் பிவிசி கார்டைக் கிளிக் செய்து ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட வேண்டும். உங்களது பதிவு செய்யப்பட்ட எண்ணில் OTP வந்தவுடன், அதை உள்ளிட வேண்டும்.

8 /8

இதற்குப் பிறகு, பணம் செலுத்திய பின், உங்கள் ஆதார் பிவிசி கார்டு ஆர்டர் பதிவாகி விடும். ஆதார் அட்டை பெற யார் விண்ணப்பித்தாலும், அட்டையில் உள்ள முகவரிக்குத்தான் பிளாஸ்டிக் ஆதார் அட்டை செல்லும் எனவும், இதில் கண்டிப்பாக முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்று UIDAI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.