தினம் 150 ரூபாய் முதலீடு - அதை 15 லட்சமாக மாற்ற பொன்னான வாய்ப்பு!

Thu, 22 Apr 2021-4:57 pm,

அஞ்சல் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதியில் நீங்கள் மாதத்திற்கு ரூ .4,500, அதாவது ஒரு நாளைக்கு ரூ .150 முதலீடு செய்தால், முதிர்ச்சி அடையும் காலத்தில், தற்போதைய வட்டி விகிதத்தின்படி, உங்களுக்கு ரூ .14 லட்சம் 84 ஆயிரம் கிடைக்கும். இந்த திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. ஒவ்வொரு மாதமும் ரூ. 4,500 முதலீடு செய்த பிறகு, 15 ஆண்டுகளில் இந்த தொகை ரூ .8,21,250 ஆக இருக்கும். ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தின்படி, ரூ. 6.63 லட்சம் வட்டியாக வரும். இதன் அடிப்படையில் மொத்தம் 14.84 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

இந்த திட்டத்தில், ஒரு வணிக ஆண்டில் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். நீங்கள் முதலீடு செய்யும் போது பிரிவு 80 சி இன் கீழ் வரி விலக்கின் நன்மையைப் பெறுவீர்கள். இந்த திட்டம் வரி சேமிப்பதில் உங்களுக்கு நிவாரணம் தரும். மூன்று விதமான வரிச்சலுகை கிடைக்கும். 

பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி நிலுவை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், 5 வது தேதி வரை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் முதலீடு செய்யுங்கள். ஒரு நாள் கூட தவறினால், நீங்கள் முதலீடு செய்த 25 நாட்களுக்குமான வட்டியின் நன்மை கிடைக்காது. ஒவ்வொரு மாதமும் இந்த தவறு நடந்தால், 365 நாட்களில் 300 நாட்களுக்கு வட்டி சலுகைகள் கிடைக்காது. இந்த சேமிப்பு திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ .1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம் 500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும்.

இதற்கிடையில், பிபிஎஃப் (பொது வருங்கால வைப்பு நிதி) திட்டத்தில் 15 ஆண்டுகளாக இருக்கும் முதிர்ச்சி காலத்தை குறைக்க வேண்டும் என்று எஸ்பிஐ ஆராய்ச்சி குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது. மேலும், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

 

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employee Provident Fund) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) ஆகியவற்றின் வட்டி விகிதங்களில் சமநிலையைக் கொண்டுவரவும் எஸ்பிஐ ஆராய்ச்சி குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. ஈபிஎஃப் மற்றும் பிபிஎஃப் வட்டி விகிதங்கள் சமமாக இருக்க வேண்டும். இதனால் மக்கள் மேலும் மேலும் சேமிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அறிக்கை கூறியுள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link