குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்
குரு வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான சுப பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
ரிஷபம்: ஜென்ம ராசியில் பயணம் செய்யும் குரு வக்ரம் உங்களுக்கு உயர்பதவியை வழங்குவார். புது முயற்சிகள் கை கூடும். திருமணம் கட்டாயம் நடக்கும். குழந்தைகள் பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும்.
மிதுனம்: குரு வக்ர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். தீபாவளி களைக்கட்டும். வாழக்கை ஒளிமயமாக இருக்கும். இருளில் இருந்து வெளியே வருவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் வேலை மற்றும் வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை பெறுவீர்கள். உங்களுடைய வாழ்க்கையில் நினைத்தது நிறைவேறும். கனவுகள் நனவாகும் காலம் கைகூடி வரப்போகிறது.
கடகம்: குரு வக்ர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். கனவுகள் பூர்த்தியாகும். அடி மேல் அடி வாங்கிக் கொண்டு இருந்தால் இப்போது குருவால் பதிலடி கொடுப்பீர்கள். திருமணம் வாழக்கையில் அன்பு அதிகரிக்கும். புத்திர பாக்கியம் பெறலாம். கை மேல் பலன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் முக்கிய பொறுப்புகளை பெறலாம்.
கன்னி: குரு பகவானின் வக்ர நிலையால் கன்னி ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு பிப்ரவரி வரை ஜாக்பாட் அடிக்கும். உங்கள் ராசியின் ஒன்பதாம் வீட்டில் குரு பயணிப்பதால் நீங்கள் உயர்பதவி பெறலாம். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். குரு பகவானின் பொன்னான பார்வை உங்களுக்கு எப்போதுமே இருக்கும். பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். செல்வ நிலையில் உயர்வு இருக்கும்.
விருச்சிகம்: குரு வக்ர பெயர்ச்சியால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கனவுகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணத்தை சேமிப்பீர்கள். இதனால் வங்கி இருப்பு அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் உண்டாகும். வீட்டும் சுபகாரியம் நடக்கும். தொழிலில் சிறந்து செயல்படுவீர்கள். வரவேண்டிய பண பாக்கி வந்து சேரும். இந்த தீபாவளி உங்களுக்கு சரவெடியாக அமையும்.
குரு பகவானின் அருள் பெற, 'குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.